உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்து விபத்து; 10 பேர் பலி; 22 பேர் பலத்த காயம்

பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்து விபத்து; 10 பேர் பலி; 22 பேர் பலத்த காயம்

இஸ்லாமாபாத்; பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில், 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 22 பேர் பலத்த காயமடைந்தனர்.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலிருந்து இஸ்லாமாபாத்தின் பஹவால்பூர் பகுதிக்குச் சென்றுகொண்டிருந்த பயணிகள் பஸ், பதே ஜங் என்ற பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணி மேற்கொண்டனர்.இந்த விபத்தில் பத்து பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 22 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். இந்த விபத்திற்கு, டிரைவரின் அலட்சியமே காரணம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு சம்பவம்! சிந்துவின் நௌஷாஹ்ரோ பெரோஸ் மாவட்டத்தில், மோரோ என்ற இடத்திற்கு அருகே லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. ஹைதராபாத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது, வேன் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே எட்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் பலத்த காயமுற்றனர். இவர்களில் 10 பேர் நிலைமை மோசமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பாகிஸ்தானில் ஒரே நாளில் இரு வெவ்வேறு சாலை விபத்துகளில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ