உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அருகருகே வந்த விமானங்கள்: மோதல் தவிர்க்க பல்டி அடித்த விமானத்தில் பணியாளர்கள் காயம்

அருகருகே வந்த விமானங்கள்: மோதல் தவிர்க்க பல்டி அடித்த விமானத்தில் பணியாளர்கள் காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: நடுவானில் அருகருகே வந்த விமானங்கள் மோதல் தவிர்க்க, பல்டி அடித்த விமானத்தில் பணியாளர்கள் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.அமரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பர்பாங்க் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் ஒரு சவுத்வெஸ்ட் விமானம், திடீரென 500 அடி உயரத்துக்கு கீழே பல்டி அடித்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r22t06qx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ராணுவ விமானத்துடன் மோதுவதை தவிர்க்க முயன்ற போது இந்த நிகழ்வு நிகழ்ந்துள்ளது.மிகக்குறைவான வினாடிகளில் நேரத்தில் 300 அடி உயரத்துக்கு விமானம் கீழே இறங்கியது.இந்த திடீர் பல்டியால், இருக்கையில் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். விமானத்தில் இருந்த இரண்டு பணிப்பெண்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.விமானியின் சாதுரியமான முயற்சியால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விமானத்தில் பயணம் செய்த பயணிகள் தங்களது துயரமான அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளனர். விமானத்தில் இருந்த அமெரிக்க நகைச்சுவை நடிகர் ஜிம்மி டோர் கூறுகையில், விமானம் திடீரென பல்டி அடித்ததால் பயணிகள் தலைகள் விமான கூரையில் மோதியது. விமான பணி பெண்களுக்கு மருத்துவ உதவியும் தேவைப்பட்டது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

KRISHNAN R
ஜூலை 27, 2025 13:26

எப்போதும் சீட் பெல்ட் அணிவது தான் நல்லது


அசோகன்
ஜூலை 26, 2025 12:22

புறப்பட்ட சில நிமிடங்களிலேயே சீட் பெல்ட் ஐ கழட்டிவிட்டார்களா..........இல்லை போடவே இல்லையா........ இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் போட சொன்னால் லாக் போடாமல் மாட்டிகொள்வது..... எல்லாம் தவறு. மக்கள் திருந்தவேண்டும்...... நல்லவேளை இது இந்தியாவில் நடக்கவில்லை, நடந்திருந்தால் தமிழ் உபி ஊடகங்களுக்கு கொண்டாட்டமாக இருந்திருக்கும்


hasan kuthoos
ஜூலை 26, 2025 10:05

விமான பயணம் இப்போது கரணம் தப்பினால் காரணம் என்ற கதையாகி விட்டது,


vns
ஜூலை 26, 2025 10:05

விமானப்பணியாளர்கள் காயம்பட்டது அனுமானிக்க முடிகிறது.. ஆனால் பயணிகள் தலை விமானத்தின் மேல் கூரையில் இடித்தது என்பது பயணிகளின் பெல்ட் அணியாமையே காரணம். விமான நிர்வாகிகள் இதற்கு பொறுப்பேற்க முடியாது.


SANKAR
ஜூலை 26, 2025 10:22

after take off belt removal advised by all airlines.passengers csn not wear belt for WHOLE DURATION of flight!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை