உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கம்போடியா- தாய்லாந்து இடையே மீண்டும் போர் நிறுத்தம் அமல்: புதிய அமைதி ஒப்பந்தம் கையெழுத்து

கம்போடியா- தாய்லாந்து இடையே மீண்டும் போர் நிறுத்தம் அமல்: புதிய அமைதி ஒப்பந்தம் கையெழுத்து

நமது நிருபர்

கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகளிடையே நடைபெற்று வந்த மோதலை முடிவுக் கொண்டு வருவதற்கான புதிய போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடுகளாக தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. கடந்த ஜூலையில் இருநாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டது. 5 நாட்கள் நீடித்த மோதலில் இரு தரப்பிலும் 43 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் மற்றும் மலேஷிய அதிபர் அன்வர் இப்ராஹிம் ஆகியோரின் முயற்சியால், அக்டோபரில் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.இந்த சூழலில், கடந்த டிசம்பர் 7ம் தேதி நடந்த மோதலில் தாய்லாந்து ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதால், மீண்டும் இரு நாடுகளுக்கிடையே சண்டை துவங்கியது. எல்லைப்பகுதியில் வசித்த லட்சக்கணக்கான மக்கள் தங்களை வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த புதிய மோதல்களால் தாய்லாந்தில் 26 வீரர்கள் மற்றும் மக்கள் 44 பேர் கொல்லப்பட்டனர். தாய்லாந்து ராணுவ வீரர்கள் கம்போடிய பகுதியில் இருந்த விஷ்ணு சிலையை இடித்து அகற்றியது பரபரப்பை கிளப்பியது. இருநாடுகளுக்கும் இடையே நிலவிய பதற்றமான சூழலை தணிக்க, மலேசிய வெளியுறவு அமைச்சர் முகமது ஹசான் தலைமையில், மலேசியா, கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் எதிரொலியாக இன்று (டிசம்பர் 27) ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, கம்போடியா மற்றும் தாய்லாந்து அரசுகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அடுத்த 72 மணி நேரத்திற்கு இந்த போர் நிறுத்தம் நீடித்தால், சிறைப்பிடித்துள்ள கம்போடியாவின் வீரர்கள் 18 பேர் விடுவிக்கப்படுவார்கள் என தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ