உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சரக்கு விமானம் வெடித்து ஏழு பேர் பலி, 11 பேர் காயம்

சரக்கு விமானம் வெடித்து ஏழு பேர் பலி, 11 பேர் காயம்

அமெரிக்கா:கென்டக்கி: அமெரிக்காவில் சரக்கு விமானம் ஒன்று, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்து விபத்துக்குள்ளானதில், மூன்று பணியாளர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்; 11 பேர் படுகாயம்அடைந்தனர். கென்டக்கி மாகாணம் லுாயிஸ்வில்லே நகரின் முகமது அலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து, யு.பி.எஸ்., என்ற சரக்கு கையாளும் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், ஹோனலுலு நகரின் ஹவாய் தீவுக்கு நேற்று முன்தினம் மாலை புறப்பட்டது. விமானம் தரையில் இருந்து சற்று மேலே உயர்ந்த நிலையில் இடது இறக்கையில் தீப்பற்றி, திடீரென வெடித்து சிதறியது. விமானத்தின் உதிரிபாகங்கள் சிதறி, அருகிலுள்ள கட்டடங்களி மீது விழுந்தன. இதில், விமானப் பணியாளர்கள் மூன்று பேர், தரையில் இருந்த நான்கு பேர் என மொத்தம் ஏழு பேர் உயிரிழந்தனர்; 11 பேர் படுகாயம் அடைந்தனர். யு.பி.எஸ்., உலகின் எட்டாவது பெரிய சரக்கு நிறுவனமாக கருதப்படுகிறது. அந்நிறுவனத்திற்கு சொந்தமான மெக்டோனல் டக்ளஸ் எம்.டி.,- - 11 என்ற ராட்சத விமானம் விபத்துக்குள்ளானது, பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க விமான போக்குவரத்து ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !