உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வீரர்களை திரும்ப பெறும் பணி சுமுகமாக நடப்பதாக சீனா கருத்து

வீரர்களை திரும்ப பெறும் பணி சுமுகமாக நடப்பதாக சீனா கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: இந்தியா - சீனா இடையேயான ஒப்பந்தத்தை தொடர்ந்து, கிழக்கு லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், வீரர்களை வாபஸ் பெறும் பணி சுமுகமாக நடந்து வருவதாக, சீனா தெரிவித்துள்ளது. இந்தியா - சீனா இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நீடிக்கிறது. கடந்த 2020ல், கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், இந்தியா - சீனா ராணுவத்தினரிடையே மோதல் வெடித்தது. இதில், இருதரப்பிலும் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள டெப்சாங்க், டெம்சோக் ஆகிய இடங்களில், இரு நாட்டு ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டனர். இதனால் இந்தியா - சீனா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இது தொடர்பாக, துாதரக ரீதியாகவும், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலும் இரு நாடுகளிடையே பலகட்ட சுற்று பேச்சுகள் நடந்தன. டெப்சாங், டெம்சோக் ஆகிய பகுதிகளில், 2020க்கு முந்தைய நிலை தொடர இரு நாடுகளும் சமீபத்தில் ஒப்புக் கொண்டன.இதையடுத்து, டெப்சாங், டெம்சோக் ஆகிய பகுதிகளில், இருதரப்பு ராணுவத்தினரும் வீரர்களை வாபஸ் பெறும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணி, இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என, கூறப்படுகிறது.இந்நிலையில், இது தொடர்பாக, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில், ''இந்தியா - சீனா இடையேயான ஒப்பந்தத்தின் கீழ், கிழக்கு லடாக்கின் டெப்சாங், டெம்சோக் பகுதிகளில் படையினர் வாபஸ் பெறப்பட்டு வருகின்றனர். இந்த பணி சுமுகமாக நடக்கிறது,'' என்றார்.டெப்சாங், டெம்சோக் ஆகிய பகுதிகளில், சீன வீரர்கள் வாபஸ் பெறப்பட்ட பின் எடுக்கப்பட்ட சேட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. டெப்சாங்கில், அக்., 11ல் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், சீன ராணுவத்தின் நான்கு வாகனங்கள், இரு தற்காலிக கூடாரங்கள் இருப்பது தெரிகிறது. நேற்று முன்தினம் எடுக்கப்பட்ட சேட்டிலைட் புகைப்படங்களில், கூடாரங்கள், வாகனங்கள் அகற்றப்பட்டிருப்பது தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

R K Raman
அக் 28, 2024 09:41

நேருவைப் போல மோடி ஏமாற மாட்டார் என்று நினைக்கிறேன். சீனா மிகவும் மோசமான நாடு. எச்சரிக்கை மிகவும் அவசியம்


Lion Drsekar
அக் 27, 2024 20:36

யாரை வேண்டுமானாலும் நம்பலாம் ? நேரு காலம் முதல் நாங்கள் பார்த்து வருகிறோம் , இழந்தது அதிகம் , வந்தே மாதரம்


surya krishna
அக் 27, 2024 15:46

China army withdrawal from here and going to attack Taiwan. criminal chinese


RAMAKRISHNAN NATESAN
அக் 27, 2024 13:38

திமுக, காங்கிரஸ் அடிமைகள் கருத்துக்களைப் படியுங்க ....... என்ன விரும்பறாங்க ன்னு புரியும் ...... சீனாவும் வாபஸ் வாங்குவதில் இந்த ஓசிகளுக்கு பலத்த ஏமாற்றம் ..... இந்த ஐந்தாம் படை துரோகிகளையும் நமது ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை பாதுகாக்குது .......


Dharmavaan
அக் 27, 2024 13:09

சீனா பதுங்குகிறது பாய விடக்கூடாது உண்மை என்ன என்பது நடுநிலை செய்தி வெளியிட வேண்டும்


Apposthalan samlin
அக் 27, 2024 11:34

2014 இல் இருந்த எல்லைக்கோடு வேற இப்பொழுது இருக்கிரா எல்லை கோடு வேற சீனா ஆக்கிரமித்தத்தை விட்டு கொடுக்க வில்லை நம் இந்தியா மலைகள் எதற்கு என்று விட்டு கொடுத்து உள்ளது அதனால் தான் சமாதானத்துக்கு வந்தார்கள் சரி மலைகள் போனால் போகுது இனிமேல் விட்டு கொடுக்க கூடாது .பிஜேபி தலைவர்கள் மூச்சே விட வில்லை இதனால் தான் அது தெரியமா? கீழே விழுந்தாலும் மண் ஓட்ட வில்லை என்று பேச கூடாது பிஜேபி சேரிந்தவர்கள் இதை பற்றி வாய் துறக்க மாட்டார்கள் .


R K Raman
அக் 28, 2024 09:44

நீங்கள் அவசியம் நேரில் சென்று பார்வை இட்டு படங்கள் வெளியிட்டால் நன்றாக இருக்கும். உடனே புறப்பட்டுச் செல்லவும். உங்கள் பண வரவு குறைந்த வருத்தம் புரிகிறது ஆனால் பல நூற்றாண்டுகளாக செய்து வந்த ஈனத் தொழிலை விட்டுவிட்டு நல்லவராக இருக்கலாம்


நிக்கோல்தாம்சன்
அக் 29, 2024 06:41

சாம்பலின் அவர்களே, நான் வடகிழக்கு மாநிலங்களில் பலமுறை போயி வந்துள்ளேன் இப்போ நீங்க சொல்லுற எல்லைக்கோட்டுக்கும் ஒரு நாள் போயி வருவேன், நீங்களும் அதற்க்கு முன்பாக போயிட்டு வந்து எழுதுனீங்க என்றால் நன்றாக இருக்கும், வாட்சாப், முகநூலில் வருவதை படித்து கருத்து எழுதாதீர்கள்


aaruthirumalai
அக் 27, 2024 10:37

மிக உயர்ந்த கவனம் தேவை.


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 27, 2024 09:45

நம்மூரு ராவுளுக்கு வயிறு எரியும் .. மோடி எப்படி சீனாதிபரை பெட்டிப்பாம்பாக அடக்கினார்.. இவரை சும்மா விடக்கூடாது. இன்னும் ஓராயிரம் பொய்யுருட்டு வதந்தி செய்தியை சமூக வலைதளத்தில் ரவுண்டு கட்டி விட்டு நாட்டை எப்படி பயத்திலேயே வைத்துக்கொள்ளவேனும் . அதுதான் என்னுடைய நியாயதர்மம் ..


VENKATASUBRAMANIAN
அக் 27, 2024 08:01

இதுவே மோடிக்கு வெற்றிதான். ஆனாலும் சீனாவிடம் எச்சரிக்கை யாக இருக்கவேண்டும்


Kasimani Baskaran
அக் 27, 2024 07:24

சீனாவை என்றும் நம்பமுடியாது. பாகிஸ்தானை அடித்து உடைத்து இந்தியாவுக்கு சொந்தமான பகுதிகளை மீட்டெடுக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை