உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அதிகார அரசியலை எதிர்க்க முன்வர வேண்டும்: இந்தியாவுக்கு சீனா அழைப்பு

அதிகார அரசியலை எதிர்க்க முன்வர வேண்டும்: இந்தியாவுக்கு சீனா அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: '' உலகின் தெற்கு பகுதியில் முக்கியமான நாடுகளாக உள்ள இந்தியாவும், சீனாவும், மேலாதிக்கத்தையும், அதிகார அரசியலையும் கூட்டாக எதிர்க்க முன் வர வேண்டும்,'' என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ கூறியுள்ளார்.பீஜிங்கில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ரஷ்யாவில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் சந்தித்த பிறகு, இரு நாடுகளுக்கு இடையிலான உறவு நேர்மறையான வளர்ச்சியை பெற்றுள்ளது. இரண்டு பண்டைய நாகரிகங்களாக உள்ள நாடுகள், எல்லை பிரச்னைக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரை எல்லை பகுதிகளில் அமைதியை பேணுவதற்கு போதுமான ஞானமும் திறனும் இந்தியா, சீனாவிடம் உள்ளது.எல்லைப் பிரச்னை அல்லது குறிப்பிட்ட கருத்து வேறுபாடுகளால் இரு தரப்பு உறவுகள் வரையறுக்கப்படுவதை நாம் ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது. அவை நமது இரு தரப்பு உறவுகளை பாதிக்கிறது. மிகப்பெரிய அண்டை நாடுகளாக, இரு நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் வெற்றியில் கூட்டாளிகளாக இருக்க வேண்டும் என சீனா நம்புகிறது.உலகின் தெற்கு பகுதியில் முக்கியமான நாடுகளாக உள்ள இந்தியாவும், சீனாவும், மேலாதிக்கத்தையும், அதிகார அரசியலையும் கூட்டாக எதிர்க்க முன் வர வேண்டும். இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பை ஏற்படுத்த வேண்டும். நாம் ஒருவரை ஒருவர் குறை மதிப்பிற்கு உட்படுத்துவதையோ அல்லது குறைத்து மதிப்பிடுவதையோ விட ஒருவருக்கு ஒருவருக்கு ஒருவர் ஆதரவு அளிக்க ஒவ்வொரு காரணம் உள்ளது. இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

ஆரூர் ரங்
மார் 08, 2025 14:29

ரஷ்யாவுடன் டிரம்ப் நெருங்குவதைப் பார்த்து பயம்.


Kanns
மார் 08, 2025 10:49

Let Communist China Face Heat & be Isolated by All. India Must Not Support. However Strong Relations Must be Established With FarEast-SE Asians esp Nationalist China After TakeOver by Taiwan With Merger of Tibet with India Xinjian with Mongolia


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 08, 2025 10:03

இந்தியப்பகுதிகளை ஆக்கிரமித்தது , இன்னும் ஆக்கிரமிக்க நினைப்பது அதிகார அரசியல் இல்லீங்களா சப்பை மூக்கரே ??


Srinivasan Krishnamoorthy
மார் 08, 2025 08:36

china is isolated in the new world. more and. more frauds are unearthed by trump, Elon Musk team


swami premadananda
மார் 08, 2025 08:05

Swami Vivekananda believed that a collaborative effort between China and India could revitalize not only their own societies but also contribute to the betterment of humanity as a whole.


RAJ
மார் 08, 2025 07:51

டிரம்ப் அடிச்ச அடி அப்டி... நீ முதல பாக்கிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, நேபால் மற்றும் இந்திய எல்லைகளில் உன் சித்துவிளையாட்டை நிறுத்து... அப்பாலிக்கா யோசிப்போம்..


Kasimani Baskaran
மார் 08, 2025 07:40

அதற்காக ஆக்கிரமித்த பகுதிகளை விட்டு வெளியேறிவிடவெல்லாம் மாட்டார்கள். இந்தியா தைவானை அங்கீகரிக்க வேண்டும்.


கா. ரவிச்சந்திரன், புதுக்கோட்டை
மார் 08, 2025 05:54

முதலில் ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க சீனா ஆதரவு தந்து தனது நல்லெண்ணத்தை நிரூபிக்கட்டும்.


Mannathil Muralidharan
மார் 08, 2025 04:27

சீனர்களை நம்பலாம் ஆனால் கம்யூனிஸ்ட் சீனாவை நம்பமுடியாது


VENUGOPALAN
மார் 08, 2025 04:05

The foremost issue concerning is the border and neighbour should take meaningful steps to address it. All the other things will follow only after it


சமீபத்திய செய்தி