உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலக வர்த்தக அமைப்பில் இந்தியா மீது சீனா புகார்

உலக வர்த்தக அமைப்பில் இந்தியா மீது சீனா புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: இந்தியாவின் மின்சார வாகனங்கள், பேட்டரிக்கு வழங்கப்படும் மானியங்களால், தங்கள் நாட்டின் பொருளாதார நலன் பாதிப்பதாக, உலக வர்த்தக அமைப்பில், சீனா புகார் தெரிவித்துள்ளது. சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: இந்திய அரசின் மின்சார வாகன, பேட்டரி மானியங்கள், நியாயமற்ற போட்டியில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை இந்திய நிறுவனங்களுக்கு வழங்குகின்றன. இறக்குமதிக்கு மாற்றாக உள்ள இவை, உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறுவதாக உள்ளன. தவறுகளை இந்தியா சரி செய்ய வேண்டும். மேலும், சீன உள்நாட்டு வர்த்தகத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

சாமானியன்
அக் 16, 2025 09:17

மக்களிடம் பிரபலம் அடைய சோலார் மின்விளக்கு, பேனல், பைக், பேருந்து ஆகியவற்றிற்கு மானியம் தரவேண்டிய அவசியம் உள்ளது. அது ஒரு ஐந்து வருடங்கட்கோ பத்து வருடங்கட்கோ தான். அமெரிக்காவும், சீனாவும் அங்கே இருந்து கொண்டு தாசில் பண்ணக் கூடாது.


shyamnats
அக் 16, 2025 08:23

அடுத்த நாட்டு உள் விவகாரத்தில் தலையிட, சீனாவிற்கு யார் உரிமை கொடுத்தது? சீனா அமெரிக்காவிற்கு அடிபணிகிறதா என்ன. சீனாக்காரனுக்கு தெரிகிற விஷயம் கூட - மக்களுக்காக உழைக்கிற மோடிஜி பற்றி - இங்குள்ள சீனா மற்றும் அமெரிக்க கொத்தடிமைகளுக்கு தெரியவில்லை.


Rajasekar Jayaraman
அக் 16, 2025 07:48

எம் நாட்டு மக்களுக்கு எங்கள் அரசு தரும் மான்யத்தை நீ குறை சொல்ல ஒன்றும் இல்லைஇது உள்நாட்டு விஷயம்.


raja
அக் 16, 2025 07:07

எலன் மஸ்க் இங்கே வந்ததில் ட்ரம்ப்க்கும் ஜிங்குக்கும் பெரிய ஏமாற்றம்.. அதான் வாதியார்கிட்ட சார் இவன் என்னைய கில்லிடான்னு புகார்...சின்ன பசங்க...


N.Purushothaman
அக் 16, 2025 06:46

உங்க நாட்டை சேர்ந்த பிரபல மின்சார கார் உற்பத்தி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியே சீனாவில் கட்டுக்கடங்காத அளவிற்கு மின்சார வாகன நிறுவனங்கள் பெருகி உள்ளதுன்னு சொல்லி இருக்காரே..அது என்ன விதம் ? குறைந்தபட்சம் 500 சார் நிறுவனங்கள் புற்றீசல் போல முளைச்சி இருக்காமே ...குடிசை தொழில் மாதிரிபண்ணிக்கிட்டு நொட்டை சொன்னால் எப்படி ?


Alphonse Mariaa
அக் 16, 2025 04:47

வரி 200% போடுங்க


Kasimani Baskaran
அக் 16, 2025 03:39

சோ வாட்... இந்தியா மட்டும் உள்நாட்டு வர்த்தகத்தை பாதுகாக்கக்கூடாதா..


Sankar Ramu
அக் 16, 2025 03:20

அமெரிக்கா மின்சார காருக்கு கொடுத்தப்ப சொல்ல வேண்டியதுதானே?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை