உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  அமெரிக்க நிறுவனங்களுக்கு தடை விதித்தது சீனா

 அமெரிக்க நிறுவனங்களுக்கு தடை விதித்தது சீனா

பீஜிங்: தைவானுக்கு ஆயுதங்கள் விற்க ஒப்பந்தம் போட்டதால், அமெரிக்காவின், 20 ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்துள்ளது. நம் அண்டை நாடான சீனா அதன் அருகே உள்ள தைவானை சொந்தம் கொண்டாடி வருகிறது. இதுதொடர்பாக, இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்னை நீடிக்கிறது. இந்நிலையில், சீனாவின் எதிர்ப்பை மீறி, 99,822 கோடி ரூபாய் மதிப்பில் தைவானுக்கு ஆயுதங்கள் விற்க அமெரிக்கா ஒப்பந்தம் போட்டது. ஆ த்திரமடைந்த சீனா, அமெரிக்காவில் உள்ள ஆயுத தயாரிப்பு மற்றும் ராணுவ தளவாடம் சார்ந்த 20 நிறுவனங்களுக்கு அதிரடியாக தடை விதித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'தைவான் பிரச்னையில், ஆத்திர மூட்டும் செயல்களை செய்ய முயற்சிக்கும் எவருக்கும் சீனாவின் உறுதியான பதில் வழங்கப்படும். 'ஒரே சீனா என்ற கொள்கையை அமெரிக்கா கடைப்பிடிக்க வேண்டும். தைவானுக்கு ஆயுதம் வழங்கும் ஆபத்தான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது தடை செய்யப்பட்டுள்ள 20 நிறுவனங்களில், பெரும்பாலானவை சீனாவுடன் வர்த்தகம் செய்யவில்லை. எனவே, இந்த தடை என்பது அமெரிக்காவிற்கு எச்சரிக்கையாகவே கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்