உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எச்1பி விசாவுக்கு போட்டி கே விசா: அறிமுகம் செய்கிறது சீனா!

எச்1பி விசாவுக்கு போட்டி கே விசா: அறிமுகம் செய்கிறது சீனா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: எச்1பி விசா பெறுவதற்கு அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ள நிலையில், பிற நாடுகளில் இருந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களை ஈர்ப்பதற்காக கே விசாவை அறிமுகப்படுத்துகிறது சீனா.எச்1பி குழப்பங்களுக்கு மத்தியில், அக்டோபர் 1 முதல் உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்க சீனா புதிய கே விசாவை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.அமெரிக்க எச்1பி விசாவின் சீனாவின் பதிப்பு என்று பார்வையாளர்கள் அழைக்கும் கே விசா, திறமையாளர்களை அந்த நாட்டுக்கு ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.உலகம் முழுவதிலுமிருந்து, குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் திறமையான நிபுணர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய 'கே விசா' வகையை அறிமுகப்படுத்துவதாக சீனா இன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சீனாவின் அதிகாரப்பூர்வ அறிக்கை:ஆகஸ்டில் அங்கீகரிக்கப்பட்ட இந்த முடிவு, வெளிநாட்டினரின் நுழைவு மற்றும் வெளியேறும் விதிமுறைகளை திருத்துகிறது. மேலும் இது அக்டோபர் 1, 2025 முதல் அமலுக்கு வரும்.சீனாவின் நெறிப்படுத்தப்பட்ட விசா பாதை, மாற்று இடங்களைத் தேடும் வெளிநாட்டு நிபுணர்களை, குறிப்பாக தெற்காசியாவைச் சேர்ந்தவர்களை ஈர்ப்பதற்கான ஒரு எதிர் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

யார் விண்ணப்பிக்கலாம்?

கே விசா, சீனாவிலோ அல்லது வெளிநாட்டிலோ உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது ஆராய்ச்சி நிறுவனங்களில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் துறைகளில் இளங்கலைப் பட்டம் அல்லது அதற்கு மேல் பட்டம் பெற்ற வெளிநாட்டு இளம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறமையாளர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையும்.இது போன்ற நிறுவனங்களில் கற்பித்தல் அல்லது ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இளம் நிபுணர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.விண்ணப்பதாரர்கள் சீன அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் மற்றும் துணை ஆவணங்களை வழங்க வேண்டும்.

கே விசாவின் முக்கிய அம்சங்கள்:

சீனாவின் தற்போதைய 12 சாதாரண விசா வகைகளுடன் ஒப்பிடும்போது, ​​கே விசா குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும்.பெரும்பாலான வேலை விசாக்களைப் போல் அல்லாமல், விண்ணப்பதாரர்கள் ஒரு உள்நாட்டு முதலாளி அல்லது நிறுவனம் ஸ்பான்சர் வழங்க வேண்டிய அவசியமில்லை, சீனாவிற்குள் நுழைந்த பிறகு, கே விசா வைத்திருப்பவர்கள் தொழில்முனைவோர் மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கு கூடுதலாக கல்வி, கலாசாரம் மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் கல்வி பரிமாற்றங்களில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

SANKAR
செப் 22, 2025 06:58

what is the cost?


அப்பாவி
செப் 22, 2025 06:29

இந்தியாவும் எதாவது ஒரு விசா குடுத்து நிபுணர்களை வரவழைக்கணும்.


RAJ
செப் 22, 2025 01:53

என்ன அமெரிக்கா வாயில ஆப்பு வச்சுப்புட்டான்...


ஜெய்ஹிந்த்புரம்
செப் 22, 2025 00:18

H1 B விசாவுக்காக போலி ஆவணங்களை வைத்து ஏமாற்றி விசா வாங்குவது போல இங்கேயும் அப்படி செய்தால் தலைகீழாக தொங்கவிட்டுடுவாங்க. குஜராத்தி, பஞ்சாபி, ஆந்திராவாடுகள் ஜாக்கிரதை


ManiMurugan Murugan
செப் 21, 2025 23:49

ManiMurugan Murugan சீனாவை நம்பி போக க் கூடாது இந்தியர்கள் யோசித்து செயல்படவும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை