உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 4 மாதங்களில் 85,000 இந்தியர்களுக்கு விசா வழங்கியது சீனா!

4 மாதங்களில் 85,000 இந்தியர்களுக்கு விசா வழங்கியது சீனா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெய்ஜிங்: 4 மாதங்களில் 85,000 இந்தியர்களுக்கு விசா அளித்துள்ளதாக இந்தியாவுக்கான சீன தூதர் வெளியிட்டுள்ள வலைதள பதிவு, அதிகம் பேரை ஈர்த்துள்ளது.அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான மறைமுக போர் இன்னமும் ஓயவில்லை. மறைமுகமாக இருந்த இந்த போர், பரஸ்பர வரி என்ற டிரம்ப் நடவடிக்கை மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. டிரம்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சீனாவும் அமெரிக்கா மீது வரியை விதித்தது. தங்கள் நாட்டு மக்கள், அமெரிக்காவுக்கு அவசியமின்றி பயணிக்க வேண்டாம் என்றும் கூறி இருந்தது.இந் நிலையில், இந்தியாவுக்கான சீன தூதர் சுபெய்ஹோங் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு அதிகம் பேரை கவர்ந்துள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது; 2025ம் ஆண்டு ஜன.1 முதல் ஏப்ரல் 9 வரை இந்திய தூதரகம், 85000க்கும் அதிகமான இந்தியர்களுக்கு விசா வழங்கி இருக்கிறது. இன்னும் அதிக இந்திய நண்பர்களை சீனாவுக்கு வரவேற்கிறோம். அங்கு பாதுகாப்பான, தோழமையான சீன நாட்டின் அனுபவத்தை பெறுங்கள்.இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ