உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தேர்தலில் வெளிநாட்டு தலையீடு; இந்தியா, சீனா மீது பழி சுமத்தும் கனடா

தேர்தலில் வெளிநாட்டு தலையீடு; இந்தியா, சீனா மீது பழி சுமத்தும் கனடா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: சீனாவும், இந்தியாவும் தேர்தலில் தலையிட முயற்சிக்கக்கூடும் என கனடா உளவுத்துறை குற்றம் சாட்டி உள்ளது.அமெரிக்காவின் மற்றொரு மாகாணமாக கனடாவை சேர்க்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்து வரும் நிலையில், பார்லிமென்டை கலைத்து, ஏப்., 28ல் தேர்தலை நடத்துவதாக கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.இது குறித்து கனடா உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கனடா பொதுத்தேர்தலில் சீனாவும், இந்தியாவும் தலையிட முயற்சிக்க வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் ரஷ்யாவும், பாகிஸ்தானும் அவ்வாறு செய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த தேர்தல்களில் சீனாவும், இந்தியாவும் தலையிட முயற்சி செய்தது. ஆனால் அவர்களின் தலையீட்டால் எந்த பாதிப்பும் இல்லை. தற்போதைய தேர்தலில் கனடாவின் ஜனநாயக செயல்பாட்டில் தலையிட முயற்சிக்க, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த வாய்ப்புள்ளது. கனடாவின் ஜனநாயக செயல்முறைகளில் தலையிடும் நோக்கத்தையும், திறனையும் இந்திய அரசாங்கம் கொண்டுள்ளது என்பதையும் நாங்கள் கண்டிருக்கிறோம். வெளிநாட்டு தலையீட்டு நடவடிக்கையால் தேர்தல் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்துவது கடினம். அச்சுறுத்தல் நடவடிக்கைகள் கனடாவின் ஜனநாயக செயல்முறைகள் மற்றும் நிறுவனங்களின் நேர்மையின் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைத்துவிடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Nathan
மார் 25, 2025 17:02

நீ அமெரிக்காவின் 51வது மாநிலம் தானே அதுல எப்படி இந்தியா தலையிட முடியும்


Anbuselvan
மார் 25, 2025 15:51

காலிஸ்தான் கும்பலுக்கு இங்கிருந்து சிலர் ஆதரவு செய்கிறார்கள் சொல்கிறாரோ என்னவோ


Srinivasan Krishnamoorthi
மார் 25, 2025 15:37

கனடா ஒரு தீவிரவாதிகளை ஆதரிக்கும் நாடு இந்தியா நம் நாட்டு தீவிரவாதிகளை வேறு நாட்டில் இருப்பதை பார்த்துக்கொண்டு கையாலாகாமல் பார்த்து கொண்டிருக்கிறது என்ன செய்வது அமெரிக்காவிலிருந்து ஆண்டுக்கு 200 பில்லியன் பிச்சை எடுத்துக்கொண்டு இப்படி ஒரு அறிக்கையும் கொடுக்கிறது


enkeyem
மார் 25, 2025 15:22

கனடா என்றுமே திருந்த வாய்ப்பில்லை.


Ganesh
மார் 25, 2025 12:00

இது உங்களுக்கே நல்லா இருக்கா? எங்க வீட்டு பிரச்னையை சமாளிக்கவே எங்களால முடியல.. இதுல எங்களை overtime பண்ண சொல்லறீங்களே..


அப்பாவி
மார் 25, 2025 10:17

எந்த நாட்டுக்குப் போனாலும் சொந்த நாட்டு விசுவாசியா இருந்து போன நாட்டை கெடுப்பாங்க.


Mecca Shivan
மார் 25, 2025 09:05

தீவிரவாதிகளை நம்பி ஆட்சியில் அமர்ந்தால் எந்த ஒரு நாட்டிற்கும் ஏன் மாநிலத்திற்கும் இதே நிலைமைதான் .. உதாரணம் கனடா மற்றும் பங்களாதேஷ் .. இந்த வரிசையில் பாக்கிஸ்தான் ஏற்கனவே முதலிடத்தில் உள்ளது..தீவிரவாதிகளிடம் நிதி பெற ISI மற்றும் பாக்கிஸ்தான் ராணுவம் தங்களது நாட்டை ஏற்கனவே ஒரு பகுதியை சீனாவிடமும் மீதமுள்ள பகுதியை துருக்கியிடமும் அடகுவைத்துவிட்டது .


N Sasikumar Yadhav
மார் 25, 2025 08:50

இன்னும் இவனுங்க திருந்தவில்லையா . அடுத்த நாட்டின்மீது ஆதாரமில்லாமல் எப்படித்தான் பழியை போடுகிறான்களோ . ஒருவேளை காலிஸ்தான் பயங்கரவாத கும்பலுங்க இப்படி சொல்ல சொன்னான்களோ என்னவோ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை