உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவுக்கு எதிராக அணி திரட்ட சீனா, பாகிஸ்தான் தீவிர முயற்சி

இந்தியாவுக்கு எதிராக அணி திரட்ட சீனா, பாகிஸ்தான் தீவிர முயற்சி

இஸ்லாமாபாத் : 'சார்க்' அமைப்புக்கு மாற்றாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் ஒரு புதிய அமைப்பை உருவாக்க சீனா, பாகிஸ்தான் நாடுகள் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பில், இந்தியா, பாகிஸ்தான், பூடான், ஆப்கானிஸ்தான், இலங்கை, மாலத்தீவு, நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு, பிராந்திய ஒத்துழைப்பு போன்றவற்றிற்காக 1985ல் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.கடந்த, 2016ல் ஜம்மு - காஷ்மீரின் உரி பகுதியில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், நம் ராணுவ வீரர்கள், 17 பேர் கொல்லப்பட்டனர்.இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் நடக்கவிருந்த சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித்தது. அதன் பின், சார்க் உச்சி மாநாடு நடைபெறவே இல்லை.இந்த நிலையில், சீனாவும், எல்லைப் பிரச்னை தொடர்பாக இந்தியா உடன் மோதலில் ஈடுபட்டது. மற்றொரு அண்டை நாடான வங்கதேசத்தில் அமைந்துள்ள முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால நிர்வாகமும், இந்தியா எதிர்ப்பு நிலைப்பாட்டை கொண்டுள்ளது.இந்த சூழ்நிலையில், கடந்த, 19ம் தேதி சீனாவின் குன்மிங்கில், சீனா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகள் இடையே சந்திப்பு நடந்தது.அப்போது, இந்தியா தவிர சார்க் அமைப்பில் உள்ள மற்ற தெற்காசிய நாடுகளை ஒருங்கிணைத்து, புதிய அமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு வங்கதேசம் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

V RAMASWAMY
ஜூலை 02, 2025 08:49

ஒரு மலைப்பாம்பும் கட்டுவீரியனும் சேரும் அமைப்பு.


கண்ணன்
ஜூலை 01, 2025 12:27

கொலைகாரனும் அவனுக்கு உதவும் திருடனும் மட்டுமே அப்படி ஒரு அமைப்பில் இணையலாம்


ராமகிருஷ்ணன்
ஜூலை 01, 2025 10:21

சூரியன் அவைகளை சுட்டு எரிக்கும்.


AMMAN EARTH MOVERS
ஜூலை 01, 2025 09:28

ஒரு காலத்தில் நட்பு நாடுகளாக இருந்த அண்டை நாடுகள் எல்லாம் இன்று பகை நாடுகளாக மாறிவிட்டது இது மோடி அரசின் தோல்வி


guna
ஜூலை 01, 2025 10:55

ஆத்துல திருட்டு மணல் அள்ளும் இயந்திரங்களை ஒழிக்கவேண்டும்.. புரிஞ்சா சரி


vivek
ஜூலை 01, 2025 10:55

நட்பு நாடா...எதுக்கு உளறுகிறாய்


Arunkumar,Ramnad
ஜூலை 01, 2025 12:10

உன்னுடைய எர்த் மூவர் தொழிலை விளம்பர படுத்துவதற்குதான் இந்த மாதிரி கருத்துப் போடுறியா? எங்கயிருந்து வர்றீங்க நீங்கள்லாம்...


ஆரூர் ரங்
ஜூலை 01, 2025 12:14

சுயநலம் பெருகிவிட்ட உலகில் நட்பு நாடு என்பதே நகைப்புக்குரியது. கடனுக்கும் மானியத்துக்கும் மயங்காத நாடே இல்லை.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 01, 2025 06:43

பாகிஸ்தான் சீனாவுடன் சேர்ந்திருப்பது சீனாவின் முதுகை குத்துவதற்கு என்று கூட சீனாவிற்கு புரியாமல் இருப்பது தான் சிரிப்பு , சீனா உடைந்து விட்டால் அந்த லோன் விஷயம் அப்படியே காற்றில் போயிடும் என்பது பாகிஸ்தானின் கணக்கு , இதனை அந்நாட்டு ஊடகம் கோடிட்டுள்ளது


SUBBU,MADURAI
ஜூலை 01, 2025 05:56

Xi Jinping க்கு எதிராக சீனாவில் ஒரு அணி திரண்டு கொண்டிருப்பது இந்த சீன அதிபருக்கு தெரியுமா?


சமீபத்திய செய்தி