உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா, ரஷ்யா உடனான உறவுக்கு சீனா ஆதரவு: அமெரிக்காவை சமாளிக்க கைகோர்க்கும் நாடுகள்

இந்தியா, ரஷ்யா உடனான உறவுக்கு சீனா ஆதரவு: அமெரிக்காவை சமாளிக்க கைகோர்க்கும் நாடுகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: ரஷ்யா --- இந்தியா - சீனா இடையிலான முத்தரப்பு உறவை புதுப்பிக்கும் முன்னெடுப்பை ரஷ்யா எடுத்துள்ளது. மூன்று நாடுகளுக்கு இடையிலான இந்த நட்புறவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

நட்பு

அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர், உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால், அமெரிக்காவை சமாளிக்க, ரஷ்யாவுடன் சீனா நெருக்கம் காட்டி வருகிறது. மேலும் பழைய கசப்புணர்வுகளை மறந்து இந்தியாவுடனும் நட்பு பாராட்டுவதற்கான தருணத்தை சீனா எதிர்பார்த்துள்ளது. அதற்கேற்ப கடந்த 2002ல் நிறுவப்பட்ட ஆர்.ஐ.சி., எனப்படும் ரஷ்யா- இந்தியா- சீனா முத்தரப்பு மன்றத்திற்கு புத்துயிர் அளிக்க, ரஷ்யா முனைப்பு காட்டி வருகிறது. இந்த முத்தரப்பு மன்றம் தான் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா நாடுகளின் 'பிரிக்ஸ்' அமைப்புக்கு அடித்தளம் அமைத்தது. கடைசியாக, கடந்த 2017 டிசம்பரில் இந்த மூன்று நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களின் 15வது முத்தரப்பு சந்திப்பு நடந்தது. மூன்று நாடுகளும் சர்வதேச அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கான பங்களிப்புகளை அடையாளம் காணவும் ஆர்.ஐ.சி., வழிவகுத்தது.ஆனால், 2019ல் வந்த கோவிட், லடாக் எல்லையில் சீன ராணுவத்தின் மோதல் மற்றும் பாகிஸ்தானுடன் நெருக்கமான உறவு ஆகிய பிரச்னைகளால், இந்திய - சீன உறவில் விரிசல் ஏற்பட்டது.

முத்தரப்பு உறவு

இந்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருடன் பேச்சு நடத்தினார்.இதையடுத்து, முடங்கியிருந்த மூன்று நாடுகளின் ஆர்.ஐ.சி., முத்தரப்பு உறவுக்கு புத்துயிர் அளிப்பதற்கான பேச்சுகள் மீண்டும் துவங்கி உள்ளன. அமெரிக்காவை எதிர்ப்பதற்கு இந்தியா, ரஷ்யாவின் உதவி தேவை என்பதால், முத்தரப்பு உறவை புதுப்பிக்கும் முயற்சிக்கு சீனாவும் தற்போது முழு ஆதரவு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Thirumagal kelvan
ஆக 17, 2025 11:34

ஜனநாயகமுறையில் ஐநா சபை உருவாக்கப்பட வேண்டும்...


Nagarajan D
ஜூலை 18, 2025 12:40

ஐ நா சபையை கலைத்துவிட்டு புதிய அமைப்பை அமைப்பது காலத்தின் கட்டாயம்.. அந்த அமைப்பில் எந்த ஒரு நாடும் தன்னிச்சையாக எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்கமுடியாதவாறு பயங்கவாதத்திற்கு துணை போகும் நாட்டை தனிமை படுத்துதல் உலகின் பெரியண்ணன் போன்ற செயல்படும் அமெரிக்காவை தட்டி உட்க்காரவைப்பது போன்ற செயல்களுடன் அமெரிக்கா டாலரை பலவீனப்படுத்தி புதிய வழியை கண்டுபிடித்தால் உலகிற்கு நல்லது


Karthik Madeshwaran
ஜூலை 18, 2025 11:56

என்னை பொறுத்தவரை இந்தியா அமெரிக்காவுடன் இணக்கம் காட்டட்டும் , ஆனால் சீனா , ரஷ்யாவுடன் அதீத ஒற்றுமையுடன் மிக இணக்கமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் உலகிற்கே நாம் தான் பெரியண்ணனாக இருப்போம். உலகிலையே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள், பெரிய சந்தை மதிப்பு கொண்ட நாடுகள் தானே ஆதிக்கம் செலுத்த வேண்டும். ஏன் அமெரிக்காகாவிற்கு அடங்கி போக வேண்டும்? சாட்சி காரன் காலில் விழுவத்திற்கு பதிலாக சண்டை காரன் காலில் விழலாம். இந்தியா சீனா ரஷ்யா ஓன்று சேர கூடாது என்பது தான் பழங்காலமாக அமெரிக்காவின் திட்டம். இந்திய வெளியுறவு கொள்கையை மாத்தி யோசிக்க வேண்டிய தருணம்.


vivek
ஜூலை 18, 2025 15:42

இப்போ எதுக்கு உன் மொக்கை கருத்து...அது எல்லாம் படிச்சவங்க பார்ப்பாங்க....நீ இருநூறு மட்டும் கருத்து போட்டால் போதும்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 18, 2025 11:00

அன்றும், இன்றும் இந்தியா அந்நிய உறவுகளை சரியாக பேலன்ஸ் செய்து பேணி வருகிறது .....


நிக்கோல்தாம்சன்
ஜூலை 18, 2025 07:49

இப்போ சீனா இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்தால் பாகிஸ்தான் வழக்கம் போல அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு காட்டி கொடுக்கும் , ஏற்கனவே பாகிஸ்தானிய பெண்களை சீனாவிற்கு கூட்டி கொடுத்தது மறந்து விடாதீங்க தமிழக மு.க்களே


Priyan Vadanad
ஜூலை 18, 2025 07:40

சீனா என்றாலே காங்கிரசுடன் இணைத்து நாதாரித்தனமாக எழுதும் பாவக்க வாசகர்கள் இந்த செய்திக்கு என்ன விளக்கம் சொல்வார்கள்.


Nagarajan D
ஜூலை 18, 2025 13:25

ஒரு நாட்டின் தேசிய கட்சி நம் அண்டை நாட்டின் ஒரு கட்சியுடன் அப்படி என்ன புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டானுங்க? சரி அப்படி ஒப்பந்தம் போட்டதை என்ன வென்று சொல்ல என்ன தயக்கம்... திருட்டு கூட்டம்.. சரி நாங்கள் அப்படி எழுதுகிறோம் என்று சொல்லும் உங்களுக்காவது அந்த இத்தாலிய கோஷ்ட்டி சீன தேசத்துடன் அல்ல சீன கட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் என்ன என்று எங்களுக்கு விளக்கமாக சொல்லுங்கள்.. ஒரு நாடு எந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்தாலும் அது சம்மந்தமாக எல்லா விவரங்களும் பொது வெளியில் கிடைக்கும் ஆனால் மர்மமான உங்க இத்தாலிய கோஷ்டி செய்த கொண்ட ஒப்பந்தம் ஒன்றுமே யாருக்குமே அதிலும் அதன் தற்போதய ஆகச்சிறந்த தலைமை அடிமை கார்கே விற்க்கே தெரியாதே ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை