உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மின்சாரத்தில் இயங்கும் பயணிகள் விமானம்: சீனா சோதனை

மின்சாரத்தில் இயங்கும் பயணிகள் விமானம்: சீனா சோதனை

நமது நிருபர்உலகளவில் மின்சாரத்தில் இயங்கும் டூவிலர்கள், கார்கள் ஆகியவற்றில் பல முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.அதேநேரத்தில் மின்சாரத்தில் இயங்கும் விமானத்தை சோதனை செய்து சீனா சாதித்துள்ளது. சிஇ-25 ஏ என பெயரிடப்பட்ட இந்த விமானம் 10 டன் எடை கொண்டது. 14 பேர் வரை பயணம் செய்யலாம். பேட்டரியில் இயங்கும் இவ்விமானம், 400 கிலோ மீட்டர் வரை மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்தது.சீன அரசுக்கு சொந்தமான நிறுவனம் தயாரித்த இந்த விமானம், சோதனையின் போது அனைத்து இலக்குகளையும் நிறைவு செய்தது. இச்சோதனை 57 நிமிடங்கள் 46 நொடிகள் வரை நீடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி