உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாக்.,கில் வேலை செய்யாத சீனாவின் ஏவுகணை கவசம்

பாக்.,கில் வேலை செய்யாத சீனாவின் ஏவுகணை கவசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நம் அண்டை நாடான சீனா, பாகிஸ்தானுக்கு வான் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை வழங்கி உள்ளது. அதாவது, பாக்., வான்வெளிக்குள் ஏவுகணைகள், ட்ரோன்கள் அத்துமீறி நுழைந்தால், அவற்றை கண்டுபிடித்து, இந்த அமைப்பு அழிக்கும்; மேலும் எச்சரிக்கை செய்யும். எனினும், நேற்று அதிகாலை நம் ராணுவத்தின், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, இந்த ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு வேலை செய்யவில்லை; நம் ராணுவத்தின் ட்ரோன்களை இடைமறித்து தாக்கவில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fwmh4ull&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த அமைப்பை தாண்டி சென்று, பாகிஸ்தானுக்குள் நுழைந்து நம் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி உள்ளன. இந்த தாக்குதலுக்கு, ஐரோப்பிய நாடான பிரான்சின், 'ஸ்கால்ப் குரூஸ்' ஏவுகணைகளை நம் ராணுவத்தினர் பயன்படுத்தி உள்ளனர். குறைந்த உயரத்தில் பறக்கும் திறனுடைய இந்த ஏவுகணைகள், பாகிஸ்தானின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பின் ரேடாரில் தென்படாமல் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

KSB
மே 08, 2025 20:20

We are yet to use Prithvi, Agni 5 deadliest, Brahmos even advanced countries are afraid of this, Pinaki...so many deadly weapons We are second to none. Our army, navy and airforce are united and would crush the opponents.


K.Uthirapathi
மே 08, 2025 18:37

அக்னி சீரியல் எல்லாம், வாணவெடி என்று நினைத்திருக்கிறீர்களா? நம் மேற்கு எல்லையில் இருந்து, பன்றிஸ்தானின் மேற்கு எல்லையே, சுமார் 450 கி.மீ. தான் இருக்கும். அவற்றை தாக்க நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் தேவையில்லை. மேலும் போர் இன்னும் தீவிரமடையவில்லை. குறுகிய தூரம் தாழ்வாக சென்று தாக்கும் பிரம்மோஸ் போதுமானது.


ameen
மே 08, 2025 12:48

அக்னி வகை சீரியல், புரோமஸ் எல்லாம் இந்தியாவின் சொந்த தயாரிப்பு ஏவுகணைகள்....அதுபோக வெளி நாட்டிற்கு விற்பதும், வெளி நாட்டிலிருந்து வாங்குவதும் இயல்பானது....


Yes your honor
மே 08, 2025 09:12

சீனாப் பொருட்களை பற்றி ஹிந்தியில் ஒரு போல்தி உண்டு. சலா தோ சாந்த் தக், நஹிதோ சாம் தக். வேலை செய்தால் செய்யும் இல்லையேல் இல்லை. இந்தியாவின் விமானங்கள் பாகிஸ்தானிற்குள் உட்புகுந்ததே அங்கு சைனாவில் தயாரித்த ஏர் டிபேன்ஸ் சிஸ்டம் உள்ளது என்ற தைரியத்தில் தான்.


M R Radha
மே 08, 2025 07:29

ஏன் ஏவுகணைகள் இந்தியாவில் தயாரிக்க படவில்லை?


subramanian
மே 08, 2025 07:58

உனக்கு ஒண்ணும் தெரியவில்லை என்றால், பதிவு போட வேண்டாம்.


Kumar Kumzi
மே 08, 2025 08:27

ஏவுகணை ... கடைகளில் விற்பதில்லை


Karthik
மே 08, 2025 06:15

ஈயம் பூசுனா மாதிரியும் பூசாத மாதிரியும் இருக்குற பொருள் தயாரிப்புக்கு பேருதான் மேட் இன் சைனா. ஜெய்ஹிந்த்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை