வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சீனாவிடமிருந்துதான் இலங்கை மிகவும் பாதுகாப்பாக இருக்கவேண்டும். யாரிடமிருந்து அச்சுறுத்தலோ, அவர்களிடமே பாதுகாப்பு ஒத்துழைப்பு கோருகிறது இலங்கை. விசித்திரம்.
பீஜிங்,:சீன அதிபர் ஷீ ஜின்பிங், இலங்கை பிரதமர் ஹரினி அமரசூரியா, பாதுகாப்பு உட்பட பல துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்தினர். நம் அண்டை நாடான இலங்கையின் பிரதமர் ஹரிணி அமரசூரியா, சீனாவின் பீஜிங்கில் நடைபெற்ற பெண்கள் குறித்த உலக தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற சென்றார். அந்நாட்டு பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்களை சந்தித்த அவர், நேற்று அதிபர் ஷீ ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார். அப்போது, துறைமுகப் பொருளாதாரம், நவீன விவசாயம், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா தயாராக இருப்பதாக ஜின்பிங் கூறினார். மேலும் சட்ட அமலாக்கம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், எல்லை தாண்டிய சூதாட்டம், மோசடி மற்றும் பிற குற்றச் செயல்களை கடுமையாக ஒடுக்கவும் வேண்டும் என அவர் வலியுறுத்தியதாக சீன ஊடகம் தெரிவித்துள்ளது. ஜின்பிங் - ஹரிணி அமரசூரியா இடையே நடந்த பேச்சில் இலங்கை துறைமுகங்களுக்கு வரும் சீன ஆராய்ச்சி கப்பல்கள் குறித்து எந்தவொரு விவாதமும் இடம்பெறவில்லை. உளவு கப்பல்களாக கருதப்படும் இந்த கப்பல்கள் குறித்து இந்தியா இலங்கையிடம் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சீனாவிடமிருந்துதான் இலங்கை மிகவும் பாதுகாப்பாக இருக்கவேண்டும். யாரிடமிருந்து அச்சுறுத்தலோ, அவர்களிடமே பாதுகாப்பு ஒத்துழைப்பு கோருகிறது இலங்கை. விசித்திரம்.