உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பரவிய காலரா

10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பரவிய காலரா

சியோல்: தென் கொரியாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஒருவருக்கு காலரா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவின் தென்கிழக்கு துறைமுக நகரமான சாங்வானில் உள்ள மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு அறிகுறிகளுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு காலரா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட அந்த நபர் கடந்த இரண்டு மாதங்களாக வெளிநாடுகளுக்கு சென்று வரவில்லை என்பதால் தொற்றுக்கான மூலத்தைக் கண்டறியவும், பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியவும் கொரிய நோய் தடுப்பு நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மாசுபட்ட தண்ணீர் மற்றும் உணவு மூலமே காலரா அதிகம் பரவுவதால் அப்பகுதியில் வேறு யாருக்காவது பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய சோதனை நடந்து வருகிறது. தென் கொரியாவில் 2016-ம் ஆண்டுக்குப் பிறகு பதிவாகியுள்ள முதல் காலரா பாதிப்பு இதுவாகும். முன்னதாக, 2001-ல் காலரா நோய் வேகமாக பரவியதில், 162 பேர் பாதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை