உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அடுத்த தலைவரை தேடுது ஹமாஸ் : இஸ்ரேலுக்கு எதிராக போரை தொடர உறுதி

அடுத்த தலைவரை தேடுது ஹமாஸ் : இஸ்ரேலுக்கு எதிராக போரை தொடர உறுதி

காசா: இஸ்ரேலுக்கு எதிரான போரை தொடர அடுத்த தலைவரை தேடும் பணியில் ஹமாஸ் அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xry2k1ad&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த ஆண்டு அக். 07-ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து, பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகள், திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், காசாவில், 40,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.இதையடுத்து இஸ்ரேல் -ஹமாஸ் இடையே போர் ஓராண்டை தாண்டி நடைபெற்று வரும் நிலையில், அக்16ம் தேதி, காசாவின் தெற்கு பகுதியில் உள்ள ரபா மாவட்டத்தில், இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில், ஹமாஸ் பயங்கரவாத தலைவர் யாஹ்யா சின்வார், 61, கொல்லப்பட்டார். ஹமாஸ் பயங்கரவாத அமைப்பும் உறுதிப்படுத்தி உள்ளது.யஹ்யா சின்வரை இழந்துவிட்டாலும் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தை தொடர்வோம் என்று ஹமாஸ் உறுதியேற்றுள்ளது. இதையடுத்து அடுத்த தலைவரை நியமிக்கும் பணியில் ஹமாஸ் அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது.இதன்படி கத்தாரில் இருக்கும் ஹய்யா என்பவர் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாயின. ஆனால் அவர் வெளிநாட்டில் இருந்து கொண்டு யுத்தத்தை நடத்துவது சரியாக இருக்காது யுத்த களத்தில் இருந்து செயல்படுபவரே அடுத்த தலைவராக வர அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது.எனவே கொல்லப்பட்ட யஹ்யா சின்வரின் இளைய சகோதரர் முகம்மது சின்வரை அடுத்த ஹமாஸ் தலைவராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தவிர மேலும் சிலரின் பெயரும் பட்டியலில் இருப்பதால் விரைவில் ஹமாஸ் தலைவர் பெயர் அறிவிக்கப்படலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Ramesh Sargam
அக் 19, 2024 20:10

இவங்க அடங்க மாட்டாங்க. எல்லோரையும் போட்டுத்தள்ளுங்க இஸ்ரேல்.


பாரதி
அக் 19, 2024 14:58

இந்த நாட்டுல இத்தனை பயங்கரவாதிகள் இருக்கிறார்கள் சுதந்திரமாக கேட்பதற்கு நாதியில்லை


சிந்தனை
அக் 19, 2024 14:56

பயங்கரவாத தலைவருக்கா பஞ்சம்.... எல்லாருமே பயங்கரவாத தலைவர் தானே...


Sridhar
அக் 19, 2024 13:58

ஒரு கணம் சின்னவர்னு படிச்சிட்டேன், பகீர்னு ஆயிடிச்சு அப்புறம்தான் சின்வர்னு சரியா போட்டுருக்காங்கனு தெரியுது. சரி அதுதான் போட்டு பொளந்துட்டானுங்களே, இன்னும் எதுக்கு தலைவரெல்லாம்?


Apposthalan samlin
அக் 19, 2024 13:29

பிணையக்கைதிகளை விடுவித்தாள் அடுத்த நொடியே போர் முடிந்து விடும்


J.V. Iyer
அக் 19, 2024 13:04

இந்த குற்றவாளிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் ஜால்றா போடும் குருமா, ராவுல் வின்சி, போன்றவர்களை ஹமாஸின் அடுத்த தலைவராக அறிவிக்கலாமே?


A.Kennedy
அக் 19, 2024 11:53

மனித உயிர்கள் என்பது விலை மதிப்பற்றது, ஏன் இவர்களுக்கு பொது மக்கள் ஆதரவு தருகிறார்கள் என்பது மட்டும் இன்னும் புரியவில்லை. அங்கேயும் நல்லவைகளை சொல்வதற்கு ஆட்கள் இல்லையோ என்னமோ??


Nandakumar Naidu.
அக் 19, 2024 11:18

யாராக இருந்தாலும் அவர்களின் அழிவு நிச்சயம்.


பிரேம்ஜி
அக் 19, 2024 10:44

கடவுளைக் காப்பாற்ற மனிதர்கள் அடித்துக் கொள்கிறார்கள். கடவுளுக்கு தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள முடியாது என்று நினைக்கிறார்கள்.


karthik
அக் 19, 2024 08:58

அவனையும் கொள்ளும் இஸ்ரேல் ராணுவம். முற்றிலும் துடைச்சி எரியனும் இது தான் கடைசி சந்தர்ப்பம்.


சமீபத்திய செய்தி