உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கலாசார தொடர்பு அழியாதது: தென்ஆப்ரிக்கா கலைநிகழ்ச்சிகள் குறித்து மோடி தமிழில் பதிவு

கலாசார தொடர்பு அழியாதது: தென்ஆப்ரிக்கா கலைநிகழ்ச்சிகள் குறித்து மோடி தமிழில் பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, இந்திய புலம்பெயர்ந்தோரின் உற்சாகமான கலாசார நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தார். கணபதி பிரார்த்தனை, சாந்தி மந்திரம் மற்றும் பிற தெய்வீக பிரார்த்தனைகளுடன் அவருக்கு இந்திய வம்சாவளியினர் வரவேற்பு அளித்தனர்.இந்தியாவுடனான கலாசார தொடர்பை நிலைநிறுத்தி உயிர்ப்புடன் வைத்திருப்பதில் புலம்பெயர்ந்தோரின் உணர்வை மோடி பாராட்டினார். இது குறித்து சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஜோகன்னஸ்பர்கில் தென் ஆப்ரிக்காவின் கிர்மிட்டியா பாடலுடன் 'கங்கா மையா' நிகழ்ச்சியைக் கண்டது எனக்கு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் தந்தது. இந்த நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சம் இந்தப் பாடல் தமிழில் பாடப்பட்டது.பல ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்தவர்களின் நம்பிக்கையையும் தொடர்பறாத மனப்பான்மையையும் இந்தப் பாடல் தன்னகத்தே கொண்டுள்ளது. வாழ்க்கையில் அவர்கள் ஏராளமான துன்பங்களைச் சந்தித்தனர், ஆனால் அது அவர்களின் ஊக்கத்தைக் குலைக்கவில்லை. பாடல்கள் மற்றும் பிரார்த்தனைகள் மூலம் அவர்கள் தங்கள் இதயங்களில் இந்தியாவை உயிர்ப்புடன் வைத்திருந்தனர். எனவே, இந்தக் கலாசாரத் தொடர்பு உயிரோட்டமாக இருப்பதைக் காண்பது மெச்சத்தக்கது. இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

கலாசார தொடர்பு

மற்றொரு பதிவில், ''இந்தியாவிற்கும், தென் ஆப்ரிக்காவிற்கும் இடையிலான கலாசார தொடர்பு உண்மையிலேயே மனதைத் தொடும் மற்றும் காலத்தால் அழியாதது. ஜோகன்னஸ்பர்க்கில், எனது இளம் நண்பர்கள் கணபதி பிரார்த்தனை, சாந்தி மந்திரம் மற்றும் பிற தெய்வீக பிரார்த்தனைகளை மிகுந்த பக்தியுடன் பாடினர். இதுபோன்ற தருணங்கள் நம் மக்களுக்கு இடையேயான வலுவான உறவை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன'' என மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை