உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மியான்மரில் இந்திய விமானப்படை விமானம் மீது சைபர் தாக்குதல்; நிவாரணப் பணியின் போது தொந்தரவு

மியான்மரில் இந்திய விமானப்படை விமானம் மீது சைபர் தாக்குதல்; நிவாரணப் பணியின் போது தொந்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாங்காங்: மியான்மரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள இந்திய விமானப் படை விமானத்தின் சிக்னல்கள் மீது நடுவானில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நம் அண்டை நாடான மியான்மரில், கடந்த மாதம் 29ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால், மியான்மர் தலைநகர் நய்பிடாவ், மண்டாலே உள்ளிட்ட நகரங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. வானுயர்ந்த கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வீடுகள் உள்ளிட்டவை தரைமட்டமாகின. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 3 ஆயிரத்தை கடந்தது.பாதிக்கப்பட்ட பகுதிகளில், மீட்புப் படையினர் முழு வீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆபரேஷன் பிரம்மா என்ற பெயரில் நமது நாட்டின் பாதுகாப்புப் படையினர் மியான்மர் நிலநடுக்க மீட்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய விமானப் படை விமானத்தின் சிக்னல்கள் மீது நடுவானில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த சைபர் தாக்குதல்கள் மூலம் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானிகளுக்கு பொய்யான தகவல்கள் கிடைக்க தொடங்கின. இதனால் குழப்பமடைந்த விமானிகள், அவசர கால சிக்னல்களை பயன்படுத்தி உண்மை நிலவரங்களை அறிந்து கொண்டனர். இதனால் சைபர் தாக்குதலை பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Mecca Shivan
ஏப் 14, 2025 20:35

இது சீன பன்றிகளின் வேலையாகத்தான் இருக்க முடியும்..ஏனென்றால் ரொஹிங்கியாக்களுக்கு அவளவு அறிவு கிடையாது ..அவர்களுக்கு தெரிந்தது கல் விட்டடிப்பது குண்டு வைப்பது ..


James Mani
ஏப் 14, 2025 14:32

அருமை வாழ்க இந்தியா ராணுவம்


Kumar Kumzi
ஏப் 14, 2025 13:42

ரோஹிங்கியா பயங்கரவாதிகளின் வேலையாக இருக்கும்


Ramesh Sargam
ஏப் 14, 2025 12:17

சைபர் தாக்குதலை நடத்தியது எந்த நாட்டினர்? உதவிக்கு சென்றவர்களை ஏன் தாக்கினார்கள்?


NALAM VIRUMBI
ஏப் 14, 2025 10:01

நம்மாட்கள் அறிவாளிகள். சமர்த்தும் கூட. எப்படி எதிர்கொண்டார்கள், பார்த்தீர்களா இந்தியன்டா .....


RAMAKRISHNAN NATESAN
ஏப் 14, 2025 08:33

விண்டோஸ் ஐ தொடர்ந்து கட்டிக்கொண்டு அழுதால் இந்த அவலங்கள் தொடரும் ....


vijay
ஏப் 14, 2025 10:30

அண்ணே, இந்த விமானங்களில் எல்லாம் விண்டோஸ் கிடையாதுண்ணே.


முதல் தமிழன்
ஏப் 14, 2025 10:50

நீங்கள் ரொம்ப அறிவாளி மென்பொருள் துறையில் ...ஹா.. ஹா.. ஹாங்...


RAMAKRISHNAN NATESAN
ஏப் 14, 2025 08:32

சீனாவின் விளையாட்டாக இருக்கலாம் ....


Anbuselvan
ஏப் 14, 2025 08:02

மிகவும் ஆபத்தானது நாட்டின் பாதுகாப்புக்கு


சமீபத்திய செய்தி