உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தினமும் 1 மில்லியன் டாலர் பரிசு: எலான் மஸ்க்கிற்கு கோர்ட் எச்சரிக்கை!

தினமும் 1 மில்லியன் டாலர் பரிசு: எலான் மஸ்க்கிற்கு கோர்ட் எச்சரிக்கை!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவளிப்பவர்களில் ஒருவருக்கு தினமும் ஒரு மில்லியன் டாலர் பரிசு அளிப்பதாக அறிவித்த எலான் மஸ்க்கிற்கு, அமெரிக்க கோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ.,வும் 'எக்ஸ்' சமூக வலைதள உரிமையாளருமான எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பை ஆதரித்து செயல்படுகிறார்.அமெரிக்க அதிபர் தேர்தல் முடியும் வரை தினமும் ஒருவருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு வழங்க உள்ளதாக அறிவித்திருந்தார்.டிரம்ப்பிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் ஒன்றை துவக்கி, அதற்கு ஆதரவு அளிப்பவர்களில் ஒருவருக்கு தினமும் ஒரு மில்லியன் டாலர் பரிசு வழங்குவதாக சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார்.அதன்படி தினமும் பரிசும் வழங்கி வருகிறார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரை எச்சரிக்கும் வகையில் அமெரிக்க கோர்ட் அனுப்பிய கடிதம் விபரம் வருமாறு:மஸ்க்கின் அரசியல் நடவடிக்கைகள், கூட்டாட்சி சட்டத்தை மீறக்கூடியதாகவும், மக்கள் ஓட்டளிப்பதற்கு பணம் அளிக்கும் செயலாகவும் இருப்பதால், அதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று கோர்ட் தெரிவித்துள்ளது.தேர்தல் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற ஜார்ஜ் டவுன் சட்டக்கல்லுாரி பேராசிரியரான டேனியல் லாங் கூறுகையில், எலான் மஸ்க்கின் பரிசு அறிவிப்பு, நீதித் துறையின் சிவில் அல்லது குற்றவியல் அமலாக்கத்திற்கு உட்பட்டது.பரிசு வாங்குபவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் பணம் கொடுப்பது சட்டவிரோதமானது என்றார்.பென்சில்வேனியா கவர்னர் ஜோஷ் ஷாபிரோ, ஒரு ஜனநாயகக் கட்சி மற்றும் முன்னாள் மாநில அட்டர்னி ஜெனரல், கூறுகையில், இப்படி பணம் கொடுப்பது கொடுக்கல் வாங்கல் போன்றது மற்றும் சட்டப்பூர்வ விசாரணைக்கு உகந்தது என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

S.Murali
அக் 25, 2024 12:10

ஸ்டாலின் அமெரிக்கா சென்றதன் விளைவோ ??


Ramesh Sargam
அக் 24, 2024 21:16

நம் நாட்டில் உள்ள கோர்ட் இதுபோன்று செயல்படவேண்டும்.


சமீபத்திய செய்தி