உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவின் டல்லாஸ் நகர குடியேற்ற அலுவலகத்தில், மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர்.அமெரிக்காவின் டல்லாஸில் உள்ள குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்க அலுவலகத்தில் மர்ம நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதும், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்தனர். அதற்குள் அங்கு ரத்த வெள்ளத்தில் மூவர் பலியாகி விட்டிருந்தனர்.துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார். இதில் அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலையாளியின் அடையாளத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை.துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.சமீபகாலமாக அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த செப்டம்பர் 21ம் தேதி, இண்டியானாபோலிஸில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Bala
செப் 24, 2025 22:34

இன்றய தங்க விலை நிலவரம் மாதிரி , அமெரிக்கால "இன்றய துப்பாக்கி சூட்டு நிலவரம் :


sankaranarayanan
செப் 24, 2025 21:06

சமீபகாலமாக அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. துப்பாக்கி கலாசாரத்தை முழுதும் ஒழிக்க தெரியாத அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வேண்டுமாம் அதற்கு ஒவ்வொரு நாட்டிலும் உட்கட்சி கலவரம் உண்டுபண்ணி பிறகு நாடே அமர்க்களமாக இருக்கும்போதும் தான் தலையிட்டு சமாதானம் செய்வாராம் இதற்குத்தான் இவர் அமைதி பரிசு பெறும் அதிபரா? உங்களுடைய நாட்டில் துப்பாக்கி கலாசாரத்தை முதலில் ஒழித்துவிட்டு பிறகு உலக நாடுகளைப்பற்றிய கவலை படலாம்


RAJ
செப் 24, 2025 19:52

பெரியண்ணாவுக்கு ஒரு நோ பல் பார்ச்சலு..


Moorthy
செப் 24, 2025 19:37

வோ மை காட் ! இதுதான் அமெரிக்கர்களின் அதிகபட்ச ரியாக்ஷன்


Rameshmoorthy
செப் 24, 2025 19:37

Some one says he stops war but could Not stop internal gun killings


djivagane
செப் 24, 2025 19:35

அமெரிக்காவில் இதெல்லாம் சகஜமப்பா