உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அயர்லாந்தில் பயங்கர துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு; 2 பேர் படுகாயம்

அயர்லாந்தில் பயங்கர துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு; 2 பேர் படுகாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: வடக்கு அயர்லாந்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.வடக்கு அயர்லாந்தில் உள்ள மாகுயர்ஸ்பிரிட்ஜ் கிராமத்தில் நடந்த, துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.கிராமத்தில் அமைதியான பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டால் மக்கள் பீதி அடைந்தனர். இந்த சம்பவத்தால் அந்த கிராம மக்கள் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

M Ramachandran
ஜூலை 23, 2025 18:07

தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஆனாலும் அரசியல்கட்சியின் அடாவடி காரணம்.காவல் துறை தன் வசம் வைத்து கொண்டிருக்கும் தலைவர் ஒட்டு வங்கி அரசியல் செய்வதால் சீர் குலைவு. காவல் துறை கேவலப்பட்டு தலையை குனிந்து நிற்கிறது. சட்ட மீறல்கள் அது மூடி மறைக்க பல காவுகள். சமீபகால நிகழ்வுகளே சாட்சி. ராஜாஜி காமராஜர் காலங்களில் கட்சியினர் தலையிட முடியாது. திராவிட மாடல் என்பது இது தான் என்று சான்றுடன் நிரூபணமாகினறது. தலை சரியிருந்தால் தான் வால் ஆடாது


Nada raja
ஜூலை 23, 2025 17:10

தமிழகத்தில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கு இந்த சம்பவம் எடுத்துக்காட்டு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை