உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் மரண தண்டனை அதிகரிப்பு

அமெரிக்காவில் மரண தண்டனை அதிகரிப்பு

வாஷிங்டன்:அமெரிக்காவில் கடந்த ௧௦ ஆண்டுகளில் அதிக ம ரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆண்டு என்றால் அது, 2015. அந்த ஆண்டில் 28 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதை மிஞ்சும் வகையில் இந்தாண்டு மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதுவ ரை முடிந்த ஏழு மாதங்களில், 27 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்னும் இருவருக்கு இந்த மாத இறுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. அதில் குறிப்பாக புளோரிடா மாகாணம் மு தலிடத்தில் உள்ளது. இங்கு மட்டும் இந்தாண்டில் ஒன்பது பேருக்கான மரண தண்டனையை மாகாண கவர்னர் டீசான்டிஸ் உறுதி செய்தார். அமெரிக்காவில் மரண தண்டனை விஷ ஊசி, மின்சார நாற்காலி, விஷவாயு அறை, துப் பாக்கியால் சுடுதல், துாக்கு ஆகிய முறைகளில் நிறை வேற்றப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !