உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஒரே நாளில் டாப் கியரில் முன்னேறிய சீன ஏ.ஐ., நிறுவனம்: திருட்டுக் குற்றம் சுமத்தும் அமெரிக்க நிறுவனங்கள்

ஒரே நாளில் டாப் கியரில் முன்னேறிய சீன ஏ.ஐ., நிறுவனம்: திருட்டுக் குற்றம் சுமத்தும் அமெரிக்க நிறுவனங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: சீனாவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமாக டீப்சீக் மீது மைக்ரோசாப்ட் மற்றும் ஓபன் ஏ.ஐ., ஆகிய நிறுவனங்கள் திருட்டு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளன. இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆய்வை துவக்கி உள்ளது.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஏ.ஐ.,யில் முன்னிலை வகிக்க பல நாடுகள் கடும் போட்டியில் இறங்கி வருகின்றன. ஸ்டார்கேட் என்ற ஏ.ஐ., மேம்பாட்டு கூட்டணி திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த நிலையில், அடுத்த சில நாட்களில் டீப்சீக் என்ற இரண்டு ஏ.ஐ., மாடல்களை குறைந்த செலவிலான சேவையாக சீனா அறிமுகம் செய்தது. டீப்சீக் ஏ.ஐ., மாடல்களின் போட்டியால், அமெரிக்காவின் ஓபன் ஏ.ஐ., என்விடியா ஆகிய நிறுவனங்கள் சந்தையில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.இந்நிலையில், சீனாவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமாக டீப்சீக் மீது மைக்ரோசாப்ட் மற்றும் ஓபன் ஏ.ஐ., ஆகிய நிறுவனங்கள் டேட்டா திருட்டு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது. இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆய்வை துவக்கி உள்ளது.மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செக்யூரிட்டி பிரிவு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வை துவக்கி உள்ளனர். இந்த சீன நிறுவனம், அங்கீகரிக்கப்படாத டேட்டா டவுன்லோடு மற்றும் ஓபன் ஏ.ஐ.,யின் சேவை விதிமுறைகளை மீறியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.இது குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறியதாவது: முன்னணி அமெரிக்க AI நிறுவனங்களை அடிப்படையாக கொண்டு செயல்பட சீன நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. தரவு வெளியீடு அங்கீகரிக்கப்படாத முறையில், டீப்சீக்குடன் இணைக்கப்பட்டதா என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

pmnr pmnr
ஜன 30, 2025 18:14

GOOD


Gokul Krishnan
ஜன 30, 2025 15:47

திருட்டு குற்றச்சாட்டை எப்போதும் வைக்கும் அமெரிக்கா அதற்கான ஆதாரங்களை தந்தது இல்லை இதற்கு முன் ஹுவெய் நிறுவன தலைமை நிதி அதிகாரி யை தன் அடிமை கனடா மூலம் கைது செய்தது ஆனால் கடைசி வரை ஆதாரம் இல்லை முதலில் எரிந்து கொண்டிருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மக்களை காப்பாற்றட்டும் கூகிள் திருடாத தகவல்களா கூகுளை அட்ஸ் மூலம் சந்தையை தன் கையில் யேக போக உரியமயை வைத்து ஆட்டி படைக்கிறது


Barakat Ali
ஜன 30, 2025 14:29

China thinks that only US is competitor. None else.


R Dhasarathan
ஜன 30, 2025 14:04

நீங்கள் செய்தால் தவறில்லை அதே அடுத்தவர் செய்தால் குற்றமா


Siva Subramaniam
ஜன 30, 2025 13:45

Business competition always upsets some countries, which the US refuse to accept.


sundarsvpr
ஜன 30, 2025 13:35

சீனா இருண்ட நாடு அங்கு என்ன என்ன நடக்கிறது என்பது எவருக்கும் தெரியவில்லை. ஆனால் உண்மை மறுக்கமுடியாது. அமெரிக்க கூடி கெடுக்கும். சீனா கூடாமல் கெடுக்கும். .


Kasimani Baskaran
ஜன 30, 2025 13:15

ஆச்சரியம் என்னவென்றால் இதற்க்கு தேவையான கம்ப்யூட்டிங் பவர் சீனாவில் கிடையாது. ஏகமாக கம்ப்யூட்டிங் பவர் தேவைப்படுவதால் சேட்ஜிபிடி மூலம் ஓபன் ஏஐ அவ்வளவு லாபம் சம்பாதிக்கவில்லை. போகப்போகத்தான் என்ன வகை தில்லாலங்கடி வேலை செய்தார்கள் என்பது தெரியும்.


Nandakumar Naidu.
ஜன 30, 2025 12:05

டாப் கியரில் சல்லேன்று ஏறி தோபுகடீர் என்று மல்லாக்கா படுத்துவிடும் சீனா.


சமீபத்திய செய்தி