உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீன நிறுவனம் ஏற்படுத்திய தாக்கம்; அமெரிக்க பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி

சீன நிறுவனம் ஏற்படுத்திய தாக்கம்; அமெரிக்க பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஏற்படுத்திய தாக்கத்தால் அமெரிக்க பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் பல லட்சம் கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டிப்சீக், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) துறையில் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. இது சாட் ஜி.பி.டி., மற்றும் கூகுளின் ஜெமினி ஆகியவற்றை விட சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துகிறது. இந்த நிறுவனம் மலிவு விலையில் சேவையை வழங்குகிறது. இது ஏ.ஐ., துறையில் புதிய போட்டியை ஏற்படுத்தி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m8826liz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஏற்படுத்திய தாக்கத்தால் அமெரிக்க பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் பல லட்சம் கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். ஏ.ஐ., சந்தையில் பிரபலமாக இருந்து வந்த Nvidiaன் பங்கு விலை 17% க்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்தது. ஒரு நாளில் மட்டும் அமெரிக்கா பங்குச் சந்தையில் 1 டிரில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல் டெக்னாலஜிஸ் மற்றும் சூப்பர் மைக்ரோ கம்ப்யூட்டர் ஆகியவை 7.2 சதவீதம் மற்றும் 8.9 சதவீதம் சரிந்தன. ஏ.ஐ., துறையில் இருக்கும் மைக்ரோசாப்ட், மெட்டா பிளாட்பார்ம்ஸ் மற்றும் ஆல்பபெட் உள்ளிட்ட பிற தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளும் இன்று 2.2% முதல் 3.5% வரை சரிந்தன.குறைந்த செலவில் தரமான ஏ.ஐ., அமைப்புகளை உருவாக்கும் சீனாவின் திறன் அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கின் சரிவிற்கு காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

PARTHASARATHI J S
ஜன 28, 2025 22:16

AI தொழில்நுட்பம் நாட்டிற்கு நாடு வேறுபடும்.சீன தொழில்நுட்பம் அமெரிக்காவில் செல்லுபடி ஆகாது. அதே போல சீனாவினது இந்தியாவிற்கு ஒத்து வராது. பங்கு சந்தையில் ஒரு ஒழுங்கு கிடையாது. ஆடுமாதிரி பின்னாலே செல்வது .


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 28, 2025 18:50

பாராட்டலாம் ..... இந்த AI பயன்படுத்திப்பார்க்க வேண்டும் ..


V Venkatachalam
ஜன 28, 2025 11:40

ராகுல் ஃபெரோஸ் கான் மூளை வளர்ச்சிய விட உன்னோட மூளை வளர்ச்சி அதிகமா இருக்கு...


Ganesh
ஜன 28, 2025 11:15

ஆசிய நாடுகளின் தாக்கம் இனிதே துவக்கம்... வாழ்த்துக்கள்...


V வைகுண்டேஸ்வரன்
ஜன 28, 2025 11:12

டிக் டாக் செயலியை தடை செய்ததன் பலன் உடனே தெரிந்து விட்டது போலயே?? பிடித்தாலும் இல்லைன்னாலும், சீனாவின் உள்கட்டமைப்புகள், மற்றும் மனித வாழ்வின் அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளான Power, Water, Food, Transport, Education and Medical துறைகளில் மிகவும் அபார வளர்ச்சி என்பதில் சந்தேகமே இல்லை. இப்போதே 2050 ஆம் ஆண்டிற்கான தேவைகளை சீனா நிறைவேற்றி விட்டது. பெய்ஜிங் நகரம் 2023 ல் போயிருக்கிறேன். அழகோ அழகு.


Senthoora
ஜன 28, 2025 15:02

உங்களுக்கு சங்கிகள் சிங்கில் ஸ்டார் போடுவாங்க,


visu
ஜன 28, 2025 18:13

இந்தியாவிலும் சீனா போல சர்வாதிகார ஆதியை ஏற்படுத்தினால் முன்னேற்றம் சாத்தியமே


முக்கிய வீடியோ