உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடா அமைச்சரவையில் இந்திய பெண்கள் இருவருக்கு வாய்ப்பு

கனடா அமைச்சரவையில் இந்திய பெண்கள் இருவருக்கு வாய்ப்பு

ஒட்டாவா: கனடா புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் ஒருவர் டில்லியை சேர்ந்தவர் ஆவர்.வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமராக பதவி வகித்த ஜஸ்டின் ட்ரூடோ, தன்னுடைய லிபரல் கட்சிக்குள் செல்வாக்கு குறைந்ததால் கடந்த ஜனவரியில் தன் பிரதமர் பதவியையும், கட்சி தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார். இதையடுத்து லிபரல் கட்சி தலைவராக மார்க் கார்னி சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். கனடாவின் புதிய பிரதமராகவும் தேர்வு செய்யப்பட்டார். அவர் கனடாவின் 24வது பிரதமராக பொறுப்பேற்றார். அதேநேரத்தில், கனடா புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் டில்லியில் கமல் கேராவும் ஒருவர். இந்தோ - கனடாவை சேர்ந்த அனிதா ஆனந்த் மற்றும் டில்லியில் பிறந்த கமல் கேரா ஆகியோர் பிரதமர் மார்க் கார்னியின் அமைச்சரவையில் இணைந்துள்ளனர்.

யார் இந்த அனிதா, கமல் கேரா?

* 58 வயதான அனிதா ஆனந்த புதுமை, அறிவியல் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும், 36 வயதான கமல் கேரா சுகாதார அமைச்சராகவும் உள்ளனர்.* டில்லியில் பிறந்த கமல் கேராவின் குடும்பம் அவர் பள்ளியில் படிக்கும்போதே கனடாவுக்கு குடிபெயர்ந்தது. பின்னர் அவர் டொராண்டோவின் யார்க் பல்கலைக்கழகத்தில் கேரா இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார்.* பார்லிமென்டிற்கு தேர்வு செய்யப்பட்ட எம்.பி.,க்களில் இளம் பெண்களில் ஒருவர் கமல் மேரா.* 13 ஆண்கள் மற்றும் 11 பெண்களைக் கொண்ட கார்னியின் அமைச்சரவை, ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையை விட சிறியது என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து, டில்லியில் பிறந்த கமல் கேரா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஒரு செவிலியராக, எனது நோயாளிகளுக்கு ஆதரவளிக்க எப்போதும் இருப்பதே எனது முதன்மையான முன்னுரிமை. அதே மனநிலை உடன் சுகாதார துறை அமைச்சராக பணியாற்றுவேன். பிரதமர் மார்க் கார்னியின் நம்பிக்கைக்கு மிகவும் நன்றியுள்ளவராக இருக்கிறேன், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Oru Indiyan
மார் 16, 2025 12:32

தமிழ்நாடு மந்திரியாக ஒரு உ பி கூட வர முடியாது. உ பி என்றால் உடன் பிறப்பு அல்லது உத்தரப்பிரதேசத்தை சார்ந்தவர் என்று கூட வைத்து கொள்ளலாம்.


Oru Indiyan
மார் 16, 2025 12:28

கமலா, ரிஷி சுனக் போன்ற டம்மி தூள்கள்


Ganapathy
மார் 16, 2025 11:05

நமது மத்தியரசில் கனடிய நாட்டு பெண்கள் மந்திரிகளாக இருக்க முடியும்னா நமது இந்திய நாட்டு பெண்கள் கனடிய மத்திய அரசில் அமைச்சர்களா இருக்க முடியும். என்ன அறிவாளி இதை ஒரு செய்தியாக போடத் துணிந்தானோ?இந்த செய்தியால் ஒரு பக்கம் நிரப்பப்பட்டுள்ளது. இதைவிட வேறு எந்த உபயோகமும் இல்லை.


ராமகிருஷ்ணன்
மார் 16, 2025 10:26

இதற்கு ... தான் காரணம். பிராமண எதிர்ப்பு ஆரம்பித்து உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இந்தியர்கள், தமிழர்களை உயர்த்தியவர்


ManiK
மார் 16, 2025 08:33

ட்ருடோ பதவி விலகவில்லை.. பதவி விலக வைக்கப்பட்டான் ட்ரம்ப் வருகையினால். இந்தியா, மோடி மீது வீனாக பழி போட்டதின் பலன்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
மார் 16, 2025 08:32

விரைவில் கனடாவில் தேர்தல் நடக்க இருக்கிறது. மிக குறுகிய கால, இடைக்கால அரசு. இதில் பதவியேற்று பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியாது என்றாலும் கிடைத்த வாய்ப்பில் நேர்மையாக, உறுதியாக, திறமையாக செயல்பட வாழ்த்துக்கள். அடுத்த தேர்தலில் ட்ரூடோ கட்சிக்கு வாய்ப்பில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே திறமையாக செயல்பட்டு சுய அரசியல் முன்னேற்றத்திற்காக உழைக்கலாம்.


பிரேம்ஜி
மார் 16, 2025 07:44

இந்த நியூஸ் எதற்கு? இவர்களின் பதவியால் இந்தியாவுக்கு பைசா பிரயோஜனம் உண்டா?


ராஜவேல்,வத்தலக்குண்டு
மார் 16, 2025 08:40

உண்மைதான். பொதுவாக இந்திய வம்சாவளிகள் என்றாலே அவர்களில் 99% சதவீதம் பேர் இந்தியாவிற்கு எதிராக செயல் படுபவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். எ.கா. கமலாஹாரிஸ்


சமீபத்திய செய்தி