உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தோனேஷியாவில் 3 இந்தியர்களுக்கு மரண தண்டனை: தலையிட மத்திய அரசுக்கு டில்லி ஐகோர்ட் உத்தரவு

இந்தோனேஷியாவில் 3 இந்தியர்களுக்கு மரண தண்டனை: தலையிட மத்திய அரசுக்கு டில்லி ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியர்கள் மூவருக்கு உதவும் வகையில் மத்திய அரசு தலையிட டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டது.இந்தியாவைச் சேர்ந்த ராஜூ முத்துக்குமரன், செல்வதுரை தினகரன் மற்றும் கோவிந்தசாமி விமல்காந்தன் ஆகியோர் இந்தோனேஷியாவில் கப்பல் கட்டும் தளத்தில் வேலைபார்த்து வந்தனர். அங்கு அவர்கள் போதைப்பொருள் வைத்து இருந்ததாக, அந்நாட்டு போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் மீதான வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் கடந்த மாதம் 25ம் தேதி மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.இதனையடுத்து அவர்களின் மனைவிகள் மற்றும் உறவினர்கள், அவர்களை மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தங்களது குடும்பத்தில் அவர்களின் சம்பளத்தை நம்பியே உள்ளதாக தெரிவித்து இருந்தனர்.அவர்களை மீட்டுத்தர மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இதனை விசாரித்த நீதிபதி சச்சின் தத்தா பிறப்பித்த உத்தரவு: இந்தோனேஷியா சிறையில் உள்ளவர்களுக்கு சட்ட உதவி மற்றும் மேல்முறையீடு தொடர்பான தீர்வுகளை கிடைக்க அந்நாட்டிற்கான இந்தியத் தூதரகம் தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அவர்களுக்கும், இந்தியாவில் உள்ள குடும்பத்தினருடன் பேசுவதற்கான உதவியை செய்ய வேண்டும். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தோனேஷியா அரசை தொடர்பு கொண்டு, அவர்களின் உரிமையை காக்க தேவையான நடவடிக்கைகளை இரு தரப்பு ஒப்பந்தம் அல்லது சர்வதேச முடிவுகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Mecca Shivan
மே 03, 2025 10:00

மத்திய அரசை நேரடியாகவே நாடியிருக்கலாம் ..குறைந்தபட்சம் விடியல் ஆட்சியை நாடியிருந்தால் கூட தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு எதாவது செய்திருப்பார்கள் .. இஸ்லாமிய நாட்டில் போதைப்பொருள் வைத்திருந்தால் அது இஸ்லாமியர்களாக இருந்தாலும் மரண தண்டனைதான் ..தமிழர்கள் என்ற உணர்வை வைத்து அரசியல் செய்ய சைமன் மற்றும் விஜய் நாடகம் ஆரம்பித்துவிடும்


RAMAKRISHNAN NATESAN
மே 03, 2025 08:29

விசாரித்த நீதிபதி சச்சின் தத்தா பிறப்பித்த உத்தரவு ? பெங்காலிகளுக்கு மூர்க்கம் ன்னா தனிப்பாசம் .....


RAMAKRISHNAN NATESAN
மே 03, 2025 08:28

அங்கே மூர்க்கன்ஸ் இனத்தின் பாரம்பரிய யாவாரமான போதைப்பொருள் கடத்தல் / விநியோகம் பண்ணுறதில்லையா ? அல்லது சட்டத்துக்கு பயந்து கமுக்கமா இருக்காங்களா ? அல்லது சட்டம் இவர்கள் பெரும்பான்மையினர் என்பதால் ஃபிரீயா உட்டுருதா ?


Kasimani Baskaran
மே 03, 2025 07:10

நல்ல வேளை இந்தோனேசிய அரசுக்கு கட்டளையிடாமல் விட்டார்களே..


Mani . V
மே 03, 2025 06:30

அந்தந்த நாட்டு சட்டங்களை மதித்து நடக்க வேண்டும். இந்தோனேஷியாவில் போதைப் பொருள் தடை செய்யப்பட்டு இருக்கும் பொழுது, இவர்கள் எதற்கு போதைப் பொருளை எடுத்துச் சென்றார்கள்? சிலர் பிற நாட்டு சட்டங்களை மதிக்காமல் இருந்துவிட்டு பின்னர் இந்தியா அரசு தலையிட வேண்டும் என்று சொல்வது எந்த விதத்தில் சரி?


வாய்மையே வெல்லும்
மே 03, 2025 05:21

கஞ்சா கடத்தல் ட்ராவிடிய திருட்டு தொழில் இந்தோனேஷியா வரை சென்று அங்கு பிடிபட்ட தமிழர்கள் மரண தண்டனை வரை சென்றுள்ளது. குருமா மற்றும் பிதற்றல் கையாலாகாத மாடல் அரசு என்ன செய்ய போகிறது இந்த விவகாரத்தில் ??


திருட்டு திராவிடன்
மே 02, 2025 23:53

தேவையான பொழுது மத்திய அரசு இதை செய் அதை செய் என்று கூறுவார்கள்.


மீனவ நண்பன்
மே 02, 2025 23:21

எல்லா வேலைகளையும் நீதிமன்றங்கள் சொல்லி செய்ய வேண்டிய அவசியம் என்ன ? இந்த நீதி மான்கள் அந்த நீதி மான்களுடன் பேசி பிரச்னையை தீர்க்க முடியாதா ? நீதித்துறை தங்கள் செலவுகளை தாங்களாகவே சமாளிக்க வழி வகைகள் உண்டா ? ஒரு தடவை கோர்ட்டில் வழக்காட லட்சங்களை கேட்கும் வழக்குரைஞர்களிடம் குறிப்பிட்ட சதவிகிதத்தை கோர்ட்டுக்கு செலுத்தும்படி சொல்லலாமே...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை