அமெரிக்காவில் டெல்டா விமானத்தில் திடீர் தீ; நொடியில் உயிர்தப்பிய 282 பயணிகள்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
புளோரிடா; அமெரிக்காவில் 282 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த விமானம் திடீரென தீப்பிடித்தது.இதுபற்றிய விவரம் வருமாறு;மத்திய புளோரிடா விமான நிலையத்தில் இருந்து டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாரானது. இந்த விமானம் அட்லாண்டாவுக்கு செல்ல இருந்தது.விமானத்தில் 282 பயணிகள், 10 சிப்பந்திகள் மற்றும் 2 விமானிகள் இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென விமானத்தின் என்ஜினில் தீப்பிடித்தது. இதையடுத்து, துரிதமாக இறங்கிய மீட்பு படையினர், பயணிகளையும், சிப்பந்திகளையும் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வெளியேற்றினர்.இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் கூறி உள்ளனர். தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை, உரிய விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.