வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ராமர், கிருஷ்ணர் முதலாக எல்லோரும் ஜனநாய முறைப்படி தேர்வானவர்கள்.
ஜார்ஜ் டவுன்: '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.கயானா நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பார்லிமென்டின் சிறப்பு கூட்டத்தில் பேசியதாவது: இந்தியா எப்போதும் எல்லையை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தியது கிடையாது. இயற்கை வளங்களை பிடிப்பது என்ற கொள்கையில் இருந்து எப்போதும் விலகியே இருந்துள்ளோம். விண்வெளி அல்லது கடல் என எதுவாக இருந்தாலும், அது சர்வதேச ஒத்துழைப்புக்கானதாக இருக்க வேண்டும். சர்வதேச மோதலாக கூடாது என்பது எனது நம்பிக்கை .உலகளவில் தற்போது மோதலுக்கான நேரம் அல்ல. மோதலை உருவாக்குவதற்கான நிலைகளை கண்டறிந்து அகற்றுவதற்கான நேரம் இது.சிறந்த வழி
'முதலில் ஜனநாயகம்', 'முதலில் மனிதநேயம்' என்பதே முன்னேறுவதற்கான ஒரே வழி. முதலில் ஜனநாயகம் என்பது, அனைவரையும் ஒருங்கிணைத்து, அனைவரின் வளர்ச்சி என்பதுடன் முன்னேறி செல்ல கற்றுக் கொடுக்கிறது.மனிதநேயம்
'முதலில் மனிதநேயம்' என்பது நமது முடிவுக்கான திசையை தீர்மானிக்கிறது. இதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் போது அதனால் கிடைக்கும் பலன்கள் மனிதநேயத்தின் நலனுக்கானதாக இருக்கும். ஜனநாயகம்
அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குவதற்கு ஜனநாயகத்தை விட சிறந்த வழி எதுவும் இருக்க முடியாது. ஜனநாயகம் என்பது வெறும் அமைப்பு மட்டுமல்ல என்பதை இரு நாடுகளும் காட்டி உள்ளோம். நமது டிஎன்ஏ, பார்வை மற்றும் செயல்பாட்டில் ஜனநாயகம் உள்ளது என்பதை இரு நாடுகளும் ஒன்றாக காட்டி உள்ளன. 200- 250 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும், கயானாவும் ஒரே மாதிரியான போராட்டத்தை சந்தித்தன. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
ராமர், கிருஷ்ணர் முதலாக எல்லோரும் ஜனநாய முறைப்படி தேர்வானவர்கள்.