உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜன., முதல் டாக்கா- கராச்சி இடையே நேரடி விமான சேவை

ஜன., முதல் டாக்கா- கராச்சி இடையே நேரடி விமான சேவை

டாக்கா: டாக்கா - கராச்சிஇடையே நேரடி விமானங்கள் ஜனவரியில் தொடங்க வாய்ப்புள்ளது என்று வங்க தேசத்திற்கான பாக்., ஹை கமிஷனர் தெரிவி்த்துள்ளார்.வங்க தேசத்திற்கான பாக்., ஹை கமிஷனர் இம்ரான் ஹைதர் இடைக்கால அதிபர் முஹம்மது யூனுஸை சந்தித்து பேசினார் .தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளுக்காக வங்கதேசத்தில் இருந்து பாகிஸ்தானுக்குப் பயணம் செய்யும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இருதரப்பு வர்த்தகம் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.மருத்துவ அறிவியல், நானோ தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் பாகிஸ்தானில் உயர்கல்வி பயில வங்காளதேச மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது.இதனை கருத்தில் கொண்டு வரும் ஜன., முதல் டாக்கா கராச்சி இடையே விமான சேவை துவங்க உள்ளது.இவ்வாறு இம்ரான்ஹைதர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை