உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா - சீனா இடையே விரைவில் நேரடி விமான சேவை

இந்தியா - சீனா இடையே விரைவில் நேரடி விமான சேவை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவையை விரைவில் துவங்குவது குறித்து இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் ஆலோசனை நடத்தினர்.இந்தியா - சீனா இடையே இயக்கப்பட்ட நேரடி விமான சேவை கோவிட் பரவல் காரணமாக 2020ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அதே ஆண்டு மே மாதம் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் 2020ம் ஆண்டு ரோந்து செல்வது தொடர்பாக இந்திய சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இது இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால், கோவிட் பரவல் முடிந்த பிறகும் விமான சேவை இதுவரை துவக்கப்படவில்லை. தற்போது இரு நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து எல்லையில் இரு நாட்டு வீரர்களும் விலக்கி கொள்ளப்பட்டனர். முன்பு போல் ரோந்து பணி நடந்து வருகிறது.இந்நிலையில், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையில் விமான சேவையை மீண்டும் துவக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. விரைவில் கைலாஷ் மான்சரோவர் யாத்திரை துவங்க உள்ள நிலையில், விமான சேவை துவங்குவது என்பது பக்தர்களுக்கு பலனளிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
நவ 20, 2024 01:09

சீனாவிலிருந்து இறக்குமதி அதிகமாயிட்டே போகிற வரைக்கும் சும்மா இருப்பான். இனிமே மக்களும் போயி டீ குடிச்சிட்டு வரலாம்.


கிஜன்
நவ 19, 2024 23:11

சென்னையிலிருந்து ....பெய்ஜிங்கிற்கும் ...ஷங்காய்க்கும் ....தினசரி நேரடி விமானங்களை இயக்க வேண்டும் .... எல்லா விமானங்களும் ....டெல்லி ...பெங்களூரு என புறப்பட வேண்டியதில்லை ....


Duruvesan
நவ 20, 2024 03:45

அங்க உங்க கும்பல் போனால் ..., பார்த்தப்பு


பாமரன்
நவ 19, 2024 23:02

இரு நாடுகளுக்கும் இடையே நேரடி பயணிகள் விமாணங்கள்தான் இயக்கப்படலை.. சரக்கு விமானங்கள் இயங்கிக்கிட்டு தான் இருக்கு... அட சென்னையில் இருந்து நாளொன்றுக்கு குறைந்தது நான்கு நேரடி விமானங்கள் சீனாவுக்கு சென்று வருகின்றன.. நடு இரவில் சென்னையில் லேண்ட் செய்பவர்கள் குறைந்தது ஒரு சீன விமானத்தை சரக்கு முனையத்தில் பார்க்கலாம்... ஆகவே மக்களே யாவாரத்தில் ரெண்டு நாடுகள் கில்லியாதான் இருக்காங்க... எல்லையாவது மண்ணாவது... ஓட்டுப் போடும் மக்களுக்கு தான் பிம்பிளிக்கி பிளாக்கி... அவர்கள் கூட சிங்கப்பூர் பாங்காக் ஹாங்காங் வழியாக ஈசியா பேய் வரலாம்... இந்த அழகில் கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு பேச்சுவார்த்தை என்னத்த நடத்தறாய்ங்கன்னு தெர்ல...


Ramesh Sargam
நவ 19, 2024 22:12

இரு நாட்டு மக்கள் நலன் கருதி நேரடி விமான சேவை உடனே துவங்கப்படவேண்டும்.


புதிய வீடியோ