உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா -சீனா ஒப்பந்தம் எதிரொலி; எல்லையில் படை குறைப்பு ஆரம்பம்!

இந்தியா -சீனா ஒப்பந்தம் எதிரொலி; எல்லையில் படை குறைப்பு ஆரம்பம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியா -சீனா இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து, கிழக்கு லடாக் பகுதியில், நேருக்கு நேர் மோதும் வகையில் இருந்த இரு நாட்டு ராணுவத்தினரும் பின்வாங்கியுள்ளனர். இரு தரப்பிலும் இருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன.சீனாவுடன் நமக்கு எல்லை குறித்த பிரச்னை நீண்ட காலமாக உள்ளது. எல்லைகள் இதுவரை துல்லியமாக வரையறை செய்யப்படவில்லை. பதிலாக, எல்.ஏ.சி., எனப்படும் எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டு, இரு நாட்டு ராணுவமும் அவரவர் பகுதியில் ரோந்து செல்கின்றன. இந்நிலையில் கால்வான் பகுதியில் 2020ல் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இரு நாடுகளின் உறவு முன் எப்போதும் இல்லாத வகையில் சீர்கெட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0o5bs3fn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இருநாட்டு ராணுவத்தினரும், நேருக்கு நேர் மோதும் வகையில் எல்லையில் படைகளை குவித்தனர். இதற்கு தீர்வு காண நான்காண்டுகளாக, இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்தது. அதன் முடிவாக, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இருநாட்டு ராணுவத்தினரும், எந்தெந்த பகுதியில் ரோந்து செல்வது என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து, ரஷ்யாவில் கசானில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஷீ ஜின்பிங் சந்தித்து பேசினர். அப்போது, எல்லையில் ராணுவ வீரர்களை வாபஸ் பெறும் முடிவிற்கு, இருநாட்டு தலைவர்களும் ஒப்புதல் அளித்தனர். அதன்படி, இருநாட்டு ராணுவத்தினரும் தங்களது நிலைகளில் இருந்து பின்வாங்க தொடங்கியுள்ளனர்.சீன ராணுவமும் அப்பகுதியில் தங்கள் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்தது, இந்திய ராணுவமும் சில படைகளை திரும்பப் பெற்றது. எல்லையில் கூடாரங்கள் அகற்றப்பட்டன. இதனால் இருநாடுகளுக்கு இடையிலான பதற்றம் குறைந்து இயல்பு நிலை சூழல் உருவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Nandakumar Naidu.
அக் 25, 2024 13:54

இருந்தாலும் இந்த சீனா கம்யுனிச ஓநாய்களை நம்ப கூடாது. சீன எல்லையில் எப்போதும் பாதுகாப்பு தேவை.


Sivagiri
அக் 25, 2024 12:58

இங்கே இருந்து காங்கிரஸ் கம்பெனி முதலாளிகள், இங்கே உள்ள கம்மனாட்டிகள் சேர்ந்து, சீனாவிடம் போட்ட ரகசிய காண்ட்ராக்ட், முடிவுக்கு வந்திருச்சு போல, இப்போ மோடி - புடின் - ஜின்பிங், முக்கோண பிளான்கள் - ஒர்க்அவுட் ஆக ஆரம்பிச்சிருச்சு, அதே போல, காங்கிரஸ் கம்பெனி ஆதரவில், அர்பன் நக்ஸல்களால், இன்னும் கனடா எபக்ட் மட்டும்தான் பாக்கி - அதுவும் முடியப்போகுது - பாகிஸ்தான் ஏற்கனவே பணால் - - பங்களாதேஷும் பணால் ஆகப்போகுது - - அதோடு இங்கே காங்கிரஸ் கம்பெனியின் அனைத்து வெளிநாட்டு ரகசிய கான்ட்ராக்ட்களும் பணால் ஆயிடும் . . .


Barakat Ali
அக் 25, 2024 11:41

நேருவின் முட்டாள்தனத்தால் நாம் இழந்தவை அனைத்தையுமே மோடியால் மீட்க இயலாது.. மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருந்தால் அது வலிமையற்ற அரசாக அமைந்திருக்கும்.. பல விபரீதங்கள் நடந்திருக்கலாம். பெரும் விபத்தைத் தவிர்த்தவர்கள் வடநாட்டு வாக்காளர்கள் .... அவர்களுக்கு நன்றி .....


கிஜன்
அக் 25, 2024 11:26

டுரோன் கண்காணிப்பு மிக மிக அவசியம் .... நம்பவே முடியாத ஆட்கள் ....


Loganathan Kuttuva
அக் 25, 2024 11:18

எல்லை பகுதிகளில் இரு நாட்டு படை வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் அந்த வீரர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள் .


சாண்டில்யன்
அக் 25, 2024 10:55

2014 இல் இருந்த எல்லைகள் நிலை மீண்டதா? அல்லது சீனா அதன்பின்னர் ஆக்கிரமித்த இடங்கள் தாரை வார்க்கப்பட்டதா? மோடி நாட்டு மக்களுக்கு விளக்கவேண்டும்?


Ganesh Subbarao
அக் 25, 2024 11:54

அட அறிவு கொழுந்தே, சேதிகளை தேடி படி உன் முடடாள் தனத்தை இங்கு காட்டிடாதே


Ganapathy
அக் 25, 2024 12:39

யோவ் 2014...மொதல்ல இதுக்கு பதில் சொல்லு...2008ல சீன அடிமை ஒப்பந்தில் தான் ஏன் கையோப்பம் இட்டேன்னு பப்பு விளக்கினானா? அதன் ஷரத்துகளை விளக்கினானா? எத்தனை பில்லியனுக்கு நம்மை அவன் சீனனுக்கு விற்றான் என உனக்கு தெரியுமா? அறிவீலியே.


சாண்டில்யன்
அக் 25, 2024 13:59

ஏதேதோ உளறி தங்கள் புத்தியில்லா தனத்தை இங்கு காட்டியதே இவர்கள் சாதனை


Radhakrishnan Seetharaman
அக் 25, 2024 10:31

சீனாவை நம்பக்கூடாது. அடுத்த ஆறு மாதத்தில் எல்லையில் வாலாட்டுவான்.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 25, 2024 10:04

இந்த நியூஸு வந்து ரெண்டு மணிநேரம் ஆகப்போவுது.. ஆக்கிரமிப்பில் சீனா மேலும் முன்னேறியது.. அருணாச்சல் அருகே குடியிருப்புக்கள் இப்படியெல்லாம் செய்தி வந்திருந்தா இந்நேரம் டீம்கா-கான்கிராஸ் கூலிப்படைகள் ஐ மீன் இந்தியாவின் ஐந்தாம் படையினர் மோடி மீது பாய்ந்து பிராண்டியிருப்பாங்க ....


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 25, 2024 10:01

சீனனை எப்படி டீல் செய்வது என்று மோடிக்கு தெரியும்..... மோடி என்ன நேருவா ????


sundarsvpr
அக் 25, 2024 09:30

சூ இன் லாய் /ஜவஹர் ஓப்பந்தம் போல் தற்போதைய ஒப்பந்தத்தை எண்ணி எடை போடக்கூடாது. ஜவஹர் வசீகரணமான ஒரு பிரதமர். நரேந்திரன் ஒரு திறமையான தலைவர். நரேந்திரன் தன்னுடைய வெளிநாட்டு விவகாரங்களில் காட்டும் திறமை போல் உள்நாட்டு விவகாரங்களில் தேவை. காசுமீரை விலக்கி பாரத நாட்டு படம் வெளியிட்டவர்களை தேச ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தனர் என்ற சட்டத்தின்படி நடவடிக்கை மிக அவசியம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை