உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நாய் இறைச்சிக்கு தடை : தென்கொரியா பார்லிமென்ட்டில் மசோதா நிறைவேற்றம்

நாய் இறைச்சிக்கு தடை : தென்கொரியா பார்லிமென்ட்டில் மசோதா நிறைவேற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சியோல்: கடும் எதிர்ப்புக்கிடையே தென்கொரியாவில் நாய் இறைச்சிக்கு தடை விதிக்கும் மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.தென் கொரியாவில் நாய் இறைச்சியை அந்நாட்டு மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்நிலையில் நாய் இறைச்சிக்கு தடை விதிக்க அரசு எடுத்துள்ள திடீர் முடிவை கண்டித்து நாய் பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் எனவும், முடிவை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.அரசின் முடிவை வரவேற்றும், நாய்க்கறி உண்பதை நிரந்தமாக தடை செய்ய வேண்டும் என பிராணி நல ஆர்வலர்கள் கடந்தாண்டு டிசம்பரில் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதை பரிசீலித்த அந்நாட்டு அரசு கடந்த செப்டம்பரில் நாய் இறைச்சிக்கு தடை விதிக்கும் சட்டம் இயற்ற நடவடிக்கை எடுத்தது.இந்நிலையில் இன்று ( 09.01.2024) நடந்த பாராளுமன்ற கூட்ட தொடரின் போது நாய் இறைச்சிக்கு தடை விதிக்கும் மசோதா கொண்டு வரப்பட்டது. விவாதத்திற்கு பின் நடந்த வாக்கெடுப்பில் மசோதாவிற்கு ஆதரவாக 208 எம்.பி.க்கள் ஓட்டளித்தனர்.இதையடுத்து மசோதா நிறைவேறியது. இச்சட்டப்படி இனி நாய்கறியை சட்டவிரோதமாக விற்றால், மூன்றாண்டு சிறையும் அபராதமும் விதிக்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு நடந்துள்ளதாக பிராணிகள் நல ஆர்வலர்கள் தென்கொரி்ய அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
ஜன 09, 2024 21:47

சென்னையில் இவர்கள் குடிவந்த தெருக்கள் பலவற்றில் தெரு நாய்த் தொந்தரவே இல்லாமலிருந்தது. தெரு மக்கள் ????ஹாப்பி.


ராமகிருஷ்ணன்
ஜன 09, 2024 21:18

திமுகவினர் தலமை குடும்பத்தினருக்கு விஸ்வாசமாக இருப்பதற்கு காரணம் அவர்கள் திங்கும் நாய்கறி தான். நம்ம RSB க்கு நாய்கறி மிகவும் இஷ்டம். அவர்தான் கவலைபட வேணும். ரோட்டிலே அடிபட்டு செத்து கெடக்கும் நாய்கறியை அவருக்கு அனுப்பி வைக்கலாமே.


MARUTHU PANDIAR
ஜன 09, 2024 20:48

நாய்க்கறி தின்னும் இந்த ஜென்மங்களை நாட்டுக்குள் விற்றதது பெரிய தப்பு+++அதுங்க மனுஷ ஜென்மங்களா என்ன?என்னுடைய தென் கொரியா தயாரிப்புகளை உடனே வந்த விலைக்குத் தள்ளப் போகிறேன்+++குமட்டுகிறது++=இவனுவ சம்பந்தப் பட்ட எதுவும் விடியாது.சே


sankaranarayanan
ஜன 09, 2024 20:29

ஆர் எஸ் பாரதி சொன்னது போல நாய்கறி தின்பவர்களுக்குத்தான் கஷ்டம் நாம் அனைவரும் உப்பு போட்டுத்தான் தின்கிறோம் என்பதை நினைவுபடுத்துகிறார் இப்போது


Palanisamy Sekar
ஜன 09, 2024 19:19

நாமும் நமது வாழ்த்துக்களை தென்கொரிய அதிபருக்கு தெரிவிப்போம். இங்கே கூட சில பிரியாணிகளில் நாய்க்கறி சேர்ப்பதாக கேள்விப்பட்டதை அடுத்து அதிர்ச்சியுற்றோர் பலர் பிரியாணியை கடைகளில் வாங்கிசாப்பிடுவதை தவிர்த்ததாக கூறக்கேட்டுள்ளேன். பைரவர் என்பார்கள் நாயின் திருவுருவத்தை. எதிர்காலங்களில் பல வீடுகளில் குழந்தைச்செல்வத்திற்கு பதிலாக நன்றியுள்ள நாயை மட்டுமே காணமுடியும். அந்த அளவுக்கு பல வீடுகளில் நாய்வாளர்ப்பை காணமுடிகின்றது. அப்படிப்பட்ட நன்றியுள்ள ஜீவனை வதை செய்துவந்ததை தடுத்தி தென்கொரிய அரசாங்கத்துக்கு வாழ்த்துக்களை சொல்வோம்.


jagan
ஜன 09, 2024 19:12

இவனுக இந்தியர்கள் கடைக்கு உள்ளே வர அனுமதி இல்லை என்று போர்டு வைக்கிறான் சியோலில். இங்கு ஸ்ரீசிட்டி ல் உள்ள KIA கேன்டீனில் சில பகுதிகளில் இந்தியர்களுக்கு நுழைய அனுமதி இல்லை. வாசல்ல ஒரு கொரியா காரன் தடுக்கிறான். சமையல் செய்வதோ நேபாளி காரன் .


(null)
ஜன 09, 2024 19:01

What about cows and goats, are those not Animals?


மேலும் செய்திகள்







புதிய வீடியோ