உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாதுகாப்பான உலகம் படைக்க முயற்சி: டிரம்ப் உறுதி

பாதுகாப்பான உலகம் படைக்க முயற்சி: டிரம்ப் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: '' அமைதியான மற்றும் பாதுகாப்பான உலகம் படைக்க தேவையான முயற்சிகளை சீன அதிபருடன் இணைந்து மேற்கொள்வேன்,'' என அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப் கூறியுள்ளார்.வரும் 20ம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yjj8or0v&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த ஆலோசனை அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு சிறந்ததாக அமைந்தது. நிறைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம் என்பது எனது எதிர்பார்ப்பு. இதற்கான பணிகள் உடனடியாக துவங்கும். சமமான வர்த்தகம், டிக் டாக் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். பாதுகாப்பான மற்றும் அமைதியான உலகத்தை படைக்க தேவையான அனைத்தையும் நானும், ஷி ஜின்பிங்கும் இணைந்து எடுப்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

MUTHU
ஜன 18, 2025 10:06

அதுக்கு நீங்க தேவையில்லாத ஆணி புடுங்க போறேன்னு கிளம்பாம இருந்தாலே போதும்.


அப்பாவி
ஜன 18, 2025 09:01

இந்தியாவை அமுக்க சீனாவுடன் கூட்டு. மேலும் நவீன கம்பியூட்டர்கள் தயாரிக்கத் தேவையான் மூலப் பொருள்கள் இப்போது சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. சீனாவோடு நாமளும் கைகோர்த்து இறக்குமதியை டபுளாக்கினா பிழைச்சோம்.


Ram Moorthy
ஜன 18, 2025 08:27

இரண்டு வேதாளங்கள் சுயநல அமைதியை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறது அடுத்தது உலக நாடுகள் நிம்மதி போச்சு என்று அர்த்தம் கடைசியில் இரண்டு வேதாளங்கள் உயிர் போகும் வரை அழித்து கொல்லும் கொள்ளும்


Kasimani Baskaran
ஜன 18, 2025 07:57

தைவானை மட்டும் கடித்து துப்ப வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் சீனாவை பயனற்ற நாடு என்று எளிதில் டிரம்ப் உறுதி செய்வார்.


Easwar Kamal
ஜன 18, 2025 00:41

இந்த trumpan பேசியே ஆளை கொள்ளுவான். அந்த ஜின் பின் அமைதிய இருந்து கொள்ளுவான்.


Ramesh Sargam
ஜன 17, 2025 22:11

இது என்ன மீண்டும் சீனாவுடன் காதல் மலர்கிறது டிரம்புக்கு? அப்ப மோடி என் நண்பர் என்று கூறியதெல்லாம்...? இந்தியாவுடன் இனைந்து பாதுகாப்பான உலகம் படைக்க முடியாதா?


RAMAKRISHNAN NATESAN
ஜன 17, 2025 22:07

சீனாவுடன் கூட்டுச்சேர்ந்து அமைதியான, பாதுகாப்பான உலகத்தைப் படைப்பாராம் .... குவாட் ஐ ப்ளீச்சிங் போட்டு கழுவிடுவாரு .....


கிஜன்
ஜன 17, 2025 22:06

நீங்க ரெண்டுபேரும் திருவாய் மலராம இருந்தாலே ....உலகம் பாதுகாப்பானதாகத்தான் இருக்கும் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை