உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அற்புதமானவர் மோடி; அமெரிக்கா வரும் அவரை சந்திக்கிறேன்; அறிவித்தார் டிரம்ப்

அற்புதமானவர் மோடி; அமெரிக்கா வரும் அவரை சந்திக்கிறேன்; அறிவித்தார் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'அடுத்த வாரம் அமெரிக்கா வரும் பிரதமர் மோடியை சந்திக்க விரும்புகிறேன்' என அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் 'குவாட்' அமைப்பின் மாநாடு, அமெரிக்காவின் டெல்வாரே நகரில் நடக்கிறது. ஜோ பைடன் தலைமையில் நடக்கும் இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 21ம் தேதி அமெரிக்கா செல்கிறார். அடுத்த நாள், நியூயார்க் நகரில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் மோடி உரையாற்ற உள்ளார். செப்.,23ல், ஐக்கிய நாடுகள் சபையில் நடக்கும் கூட்டத்தில் பேசும் மோடி, பல்வேறு நாட்டு தலைவர்களையும் சந்திக்கிறார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டிரம்ப், மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். மிக்சிகனில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட டிரம்ப், 'அடுத்த வாரம் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளேன். பிரதமர் மோடி அற்புதமானவர்' என பேசினார். இரு தலைவர்களும் எங்கு சந்தித்துப் பேசுவார்கள் என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

என்ன காரணம்

அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளியினர் ஓட்டுக்கள் முக்கியத்துவம் வாய்ந்தது. எதிர் தரப்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு அதிகப்படியான ஓட்டுக்கள் கிடைக்க வாய்ப்பள்ளது. அதை தடுக்கும் வகையில், மோடியுடன் ஒரு சந்திப்பு நடத்தி, தானே இந்தியர்களுக்கு நெருக்கமானவர் என்று காட்டிக்கொள்ள டிரம்ப் திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

J.V. Iyer
செப் 18, 2024 19:09

இந்தியாவின் நண்பன் ட்ரம்ப். கமலா ஹாரிஸ் வந்தால் இந்தியாவை அழித்து விடுவார். பொல்லாதவர். டெமாக்ரட்டிக்காரர்கள் இந்தியாவுக்கு எதிரிகள்.


Easwar Kamal
செப் 18, 2024 16:44

நாங்க வரவேற்போம் அனல் ஆட்சிக்கு வந்தால் ஆப்பும் வைப்போம் .


RAMAKRISHNAN NATESAN
செப் 18, 2024 14:59

மோடியை யாரு புகழ்ந்தாலும் திமுக கொத்தடிமைகளுக்கு ராஜாதிராவகம் செலுத்தின மாதிரி இருக்கும் போலிருக்கு ......


Selvasubramanian Chelliah
செப் 18, 2024 13:22

பரம்பரை கொத்தடிமை 200 ரூபா வீணா போனவனே


venugopal s
செப் 18, 2024 10:53

ஒரே குணாதிசயம் உள்ள இருவருக்கு ஒருவரை ஒருவர் பிடித்துப் போவது சாதாரண விஷயம் தான்!


Hari
செப் 18, 2024 11:50

Amam un kothadimaithanam pola than venugopal


vejai
செப் 18, 2024 15:01

vaya mudu nee venugopal


RAMAKRISHNAN NATESAN
செப் 18, 2024 15:13

வேணு .... ஜாஃபர் சாதிக் எப்படி மன்னர் குடும்பத்துக்கு வேண்டியவரானார் என்றா நாங்கள் கேட்டோம் ????


xyzabc
செப் 18, 2024 10:43

உள் நாடில் இருக்கும் தீவட்டிகள் அவரை வஞ்சித்து கொண்டே இருக்கின்றனர். உண்மை


Iyer
செப் 18, 2024 10:32

டிரம்ப் தான் அடுத்த அமெரிக்க ராஷ்ட்ரபதி


Palanisamy Sekar
செப் 18, 2024 09:37

உரக்க சொன்னார் ட்ரம்ப் இனி காங்கிரஸ் இங்கே அவருக்கு எதிரான அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுக்கும். இங்கே இருந்த காங்கிரசின் பொய் பிரச்சாரத்தால் இதே அமேரிக்கா மோடிக்கு விசா தருவதில் தயக்கம் காட்டியது. காங்கிரசின் ஆட்சி அழிந்த பிறகு, உலகத்தலைவர்களில் மோடிஜியை மட்டும்தான் அமெரிக்க முழுவதும் எப்போதும் ஆதரிக்கின்றார்கள். மோடியின் நண்பருக்குத்தான் அமெரிக்க வாழும் இந்தியர்கள் வாக்களிப்பார்கள் என்கிற நிலைமையை உணர்ந்து ட்ரம்ப் பேசியுள்ளார். இங்கே உள்ள பலருக்கும் மிளகாயை அரைத்து அங்கே பூசியது போல எரியும். கதறல் சப்தம் இனி அதிகம் கேட்கும்


ஆரூர் ரங்
செப் 18, 2024 09:43

உண்மையில் மோதி அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கவேயில்லை.


மணியன்
செப் 18, 2024 09:13

ட்ரம்ப் வெற்றி பெற்றால் உலகிற்கு நன்று.பைடன் பல லட்சம் அப்பாவி உக்ரேனிய,ரஷ்ய மக்களை கொன்ற படுபாதகன்.


Velan Iyengaar
செப் 18, 2024 08:42

முதல்ல உங்க பெயரை ஒழுங்கா உச்சரிக்க கற்றுத்தாங்க ...


Bye Pass
செப் 18, 2024 10:01

ஓ .... அப்படியா ?


Kumar Kumzi
செப் 18, 2024 11:33

மொதல்ல நீ உன் சொந்த பேருல கருத்து எழுது கொத்தடிமையே


Hari
செப் 18, 2024 11:51

Yes as like your name and place... Velan from Sydney alias saidapet


Yaro Oruvan
செப் 21, 2024 10:09

எரநூறு ஓவாய்க்கு இம்புட்டு கூவனுமா ??? அது சரி பேரு வச்சதுதான் வச்ச வேளாண் வேளாளர் இல்லன்னா வேற எந்த கர்மத்தையாவது வச்சிருக்கலாம்ல.. எதுக்கு ஒல்றேன்னா ஐயங்கார்னு பேரப்பாத்துட்டு விடியல் 200 ஓவாய் டிரான்ஸ்பர் செய்யாம விட்டாலும் விட்ருவானுவ.. ஒனக்கு வந்துகிட்டு ருக்கு ... இல்லன்னா ம்புட்டு கூவமாட்ட


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை