உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 2,600 லிட்டர் தாய்ப்பால் தானம்: அமெரிக்கா பெண் நிகழ்த்திய சாதனை

2,600 லிட்டர் தாய்ப்பால் தானம்: அமெரிக்கா பெண் நிகழ்த்திய சாதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த 36 வயது பெண் இதுவரை 2,600 லிட்டர் தாய்ப்பால் தானம் அளித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் அலிசா ஓக்லெட்ரீ.36. கடந்த 2016ல் இவருக்கு முதல் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது, இவரிடம் நர்ஸ் ஒருவர் தாய்ப்பால் தானம் அளிக்கும்படி பரிந்துரை செய்துள்ளார். இதனை ஏற்று அவர் தாய்ப்பால் தானம் அளிக்க துவங்கினார். பிறகு அவருக்கு 3 குழந்தைகள் பிறந்த போதும் தாய்ப்பால் தானம் வழங்குவதை நிறுத்தவில்லை. தனது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்த போதும் மற்ற குழந்தைகளுக்கும் தானம் வழங்கி அவர்களை காப்பாற்றி வந்துள்ளார்.கடந்த 2014 ம் ஆண்டு 1,569.79 லிட்டர் தாய்ப்பால் வழங்கி கின்னஸ் சாதனை படைத்து இருந்தார். இருப்பினும் அதோடு நிற்காமல் தொடர்ந்து தாய்ப்பால் தானம் வழங்கிய அவர், தற்போது வரை 2,656.58 லிட்டர் தாய்ப்பால் தானம் வழங்கி தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.வடக்கு டெக்சாசின் தாய்ப்பால் வங்கி கணக்குப்படி ஒரு லிட்டர் தாய்ப்பால் மூலம் 11 பச்சிளம் குழந்தைகள் பசியாற முடியும். இந்த கணக்கின்படி அடிப்படையில் ஒலீசா அளித்த நன்கொடை மூலம் 3,50,000 குழந்தைகளுக்கு உதவியாக இருந்தது என கணிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

சமூக நல விருப்பி
நவ 10, 2024 20:40

Weldon sister


சிந்திப்பவன்
நவ 10, 2024 19:50

3,50,000 குழந்தைகளின் தாயை வணங்குகிறேன்


அம்பி ஐயர்
நவ 10, 2024 19:25

பாராட்டுக்கள்...அந்த பெண்மணிக்கும் அவரை தானம் கொடுக்கத் தூண்டிய அந்த செவிலியருக்கும்....


RAMESH KUMAR R V
நவ 10, 2024 18:09

கிரேட்


KRISHNAN R
நவ 10, 2024 16:27

உலகம் முழுவதும் உள்ள மக்கள் கடமைப்பட்டுள்ளனர். நன்றிகள் பல


Shankar
நவ 10, 2024 15:41

"Universal MOM"


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 10, 2024 15:26

சிறப்பு ....


SUBBU
நவ 10, 2024 14:53

பாராட்டுக்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை