உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை: அதிபர் டிரம்ப் அந்தர்பல்டி

ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை: அதிபர் டிரம்ப் அந்தர்பல்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை என போர் நிறுத்தத்திற்கு, பின் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நடந்து வந்த போது, ''ஆட்சி மாற்றம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அரசியல் ரீதியாக சரியானது அல்ல. ஆனால் தற்போதைய ஈரான் ஆட்சியால் ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற முடியவில்லை என்றால், ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது?'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி இருந்தார்.தற்போது, இஸ்ரேல்-ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு, அதிபர் டிரம்ப் தனது முடிவை மாற்றி உள்ளார். நெதர்லாந்தில் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டிற்குச் செல்ல, விமான நிலையம் வந்த டிரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை. ஈரானில் ஆட்சி மாற்றம் வேண்டாம். எல்லாம் விரைவில் அமைதியடைவதை நான் பார்க்க விரும்புகிறேன். ஆட்சி மாற்றம் குழப்பத்தை ஏற்படுத்தும். இவ்வளவு குழப்பங்களை நாம் பார்க்க விரும்பவில்லை. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார். போர் நிறுத்தத்திற்கு முன், ஆட்சி மாற்றத்தை விரும்பிய டிரம்ப் தற்போது தனது முடிவை மாற்றி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ஆரூர் ரங்
ஜூன் 25, 2025 14:48

மூர்க்க மார்க்கத்தை ஒழிக்க இன்னும் புத்திசாலித்தனம் வேண்டும். உண்மையில் மாற்றப்பட வேண்டியது நீங்கதான்.


மூர்க்கன்
ஜூன் 25, 2025 15:57

அது முடியாது.


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
ஜூன் 25, 2025 11:54

அமெரிக்க தத்தி இந்த டிரம்ப்


K.Uthirapathi
ஜூன் 25, 2025 09:38

வயசான காலத்துல, சிலபேர் அப்படி இப்படி என்று தான் பெரியவங்க பேசுவாங்க. அதற்கெல்லாம், குற்றம் கண்டு பெரியவர்களை தப்பா பேசக்கூடாது. .


bala
ஜூன் 25, 2025 09:12

பயந்துட்டான் குமாரு....


Santhosh Kumar
ஜூன் 25, 2025 09:00

bill clinton only more brilliant and personality president ability to solve international problem after george washington..


Nagarajan D
ஜூன் 25, 2025 08:45

இவர் அமெரிக்காவின் ராகுல் காந்தி.. செய்திகளில் தன்னை முன்னிலை படுத்த எதையாவது உளறிக்கொண்டே இருப்பார்


subramanian
ஜூன் 25, 2025 08:31

திமுக காரன் துண்டு சீட்டு எழுதி தர்றானா?


ஆதிநாராயணன், குவைத்
ஜூன் 25, 2025 08:26

கோமாளி


Donald
ஜூன் 25, 2025 08:19

President Komali


ஆரூர் ரங்
ஜூன் 25, 2025 07:53

கமலஹாசன் பேச்சுக்கு டப் பைட் குடுக்குறாரு. யாருக்கும் புரியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை