உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆஸ்திரேலியாவை உலுக்கிய இரட்டைக் கொலை; 47 ஆண்டுக்குப் பிறகு குற்றவாளி கைது

ஆஸ்திரேலியாவை உலுக்கிய இரட்டைக் கொலை; 47 ஆண்டுக்குப் பிறகு குற்றவாளி கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரோம்: ஆஸ்திரேலியாவில் 47 ஆண்டுகளுக்கு முன் நடந்த இரட்டைக்கொலை வழக்கில் தொடர்புடைய நபரை, ரோம் நகரில் வைத்து போலீசார் கைது செய்தனர். கடந்த 1977ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள எஸ்ஸே வீதியைச் சேர்ந்த சுஷானே ஆம்ஸ்ட்ராங்,27, சுசன் பார்ட்லெட்,28, ஆகியோர், அவர்களின் வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். ஆம்ஸ்ட்ராங் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிலையில், அவரது 16 மாத குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. மெல்போர்னை உலுக்கிய இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். உடல்களை மீட்பதற்கு 3 தினங்களுக்கு முன்பு, கத்தியுடன் சுற்றித் திரிந்த 18 வயது இளைஞரை பிடித்துள்ளனர். ஆனால், அந்த நபர் தான் குற்றவாளி என்பதை அறியாமல், அவரை போலீசார் விடுவித்து விட்டனர். பின்னர், குற்றவாளி குறித்து அடையாளம் கண்ட போலீசார், அந்த நபர் கிரீக் - ஆஸ்திரேலியா நாடுகளில் இரட்டை குடியுரிமை பெற்றவர் என தெரிய வந்தது. குற்றவாளி குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானத்தை அறிவித்து, போலீசார் துப்பு துலக்கி வந்தனர். மேலும், குற்றவாளி குறித்து முழு விபரத்தையும் அறிந்த போலீசாருக்கு, அவர் கிரீக் நாட்டின் குடியுரிமை பெற்று தஞ்சம் புகுந்திருந்ததால்,கைது செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், 47 ஆண்டுகளுக்குப் பிறகு மெல்போர்ன் இரட்டைக் கொலை வழக்கு குற்றவாளியை, இத்தாலியின் தலைநகர் புமிசினோ ஏர்போர்ட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். 18 வயதில் செய்த குற்றத்திற்காக 65 வயதில் குற்றவாளி கைதாகியுள்ளார். இது தொடர்பாக விக்டோரியா போலீஸ் தலைமை கமிஷ்னர் ஷேன் பேட்டன் கூறுகையில்,'47 ஆண்டு கால பழமையான, மிகவும் நீண்ட வழக்கு முடிவுக்கு வந்துள்ளது,' எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

karupanasamy
செப் 21, 2024 18:08

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை மாணவர் உதயகுமார் கொலை, ஆ ராசா நண்பர் சாதிக்கு தற்கொலை அண்ணாநகர் ரமேசு குடும்ப தற்கொலை இப்படியே அடிக்கிகிட்டே போகலாம். தமிழன்டா தலை நிமிர்ந்து நில்லுடான்னு சொல்லிக்கிட்டு குவாட்டர் குடிச்சிட்டு எதிர்கால தலைமுறையையே அடிமைசாசனம் எழுதி குடுத்திட்ட பகுத்தறிவுவாதிடா நீ தமிழன்டா. மறத்தமிழன்டா


என்றும் இந்தியன்
செப் 21, 2024 17:47

திருட்டு திராவிட மாடல் உலகெங்கும் - ஸ்டாலின். அப்படி இருக்கின்றது இந்த செய்தி???47 வருடமாக தேடுவார்களாம். சரி கைது???பிறகு???நம்ம நீதிமன்ற தீர்ப்பு, 47 வருடம் ஆகி விட்டதால் அவருக்கு வெறும் 20000 டாலர் fine என்று முடித்துவிடும்.


ஆரூர் ரங்
செப் 21, 2024 17:33

ஆனா பாருங்க. தாகி ராமஜெயம் கொலைக் குற்றவாளிகளை இன்னும்கூட பிடிக்க முடியவில்லை. விஞ்ஞான ஆட்களின் செயலாயிற்றே.


R. Seenivasan
செப் 21, 2024 16:38

தமிழகத்தில் நடந்திருந்தால், எப்போதோ வழக்கை விசாரிக்க முடியாமல் முடித்து வைத்திருப்பார்கள்.


RAMAKRISHNAN NATESAN
செப் 21, 2024 15:58

ஆட்டோ ஷங்கருடன் தூக்கில் தொங்கவேண்டிய ஒருத்தன் என்னத்தைச் சொல்ல ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை