உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மியான்மரில் பலி 1644 ஐ தாண்டியது : மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி

மியான்மரில் பலி 1644 ஐ தாண்டியது : மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி

பாங்காக்: மியான்மர் நாட்டில் நேற்று (மார்ச்-28 ), இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவாகின. இது, தாய்லாந்திலும் மிகப் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது. பாங்காக் நகரில் சில வானுயர்ந்த கட்டடங்கள் சரிந்து விழுந்தன. நில நடுக்க இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1644 ஐ தாண்டியுள்ளது. 3,400 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மேலும் உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.இதனிடையே இன்று( மார்ச்29) மாலை ரிக்டர் அளவில் 5.1 என்ற அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9li43kzo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவானது. சகாயிங் நகரின் வடமேற்கே, 16 கி.மீ., தொலைவில், 10 கி.மீ., ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், இதன் அதிர்வுகள் தென்மேற்கு சீனா மற்றும் தாய்லாந்தில் உணரப்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட 12 நிமிடங்களில், 6.4 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம், மியான்மரை அதிரச் செய்தது. இது, மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டாலே அருகே ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நய்பிடாவ், மண்டாலே உட்பட ஆறு பிராந்தியங்களில் அவசரநிலையை மியான்மர் ராணுவ அரசு அறிவித்தது. மண்டாலே நகரத்தின் அருகே இர்ரவாடி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த, 90 ஆண்டுகள் பழமையான பாலம் உடைந்தது.

தாய்லாந்தில் 10 பேர் பலி!

இந்த அதிர்வுகளால் கட்டடங்கள் சரிந்ததில், மியான்மரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1644 ஐ தொட்டது. 3,400 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும் உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மியான்மரில் இன்று (மார்ச் 29) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.2ஆக பதிவாகி உள்ளது.இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தலைநகர் பாங்காக்கில் வானுயர்ந்த கட்டடங்கள் குலுங்கின. கட்டுமானப் பணி நடந்து வந்த 30 மாடி கட்டடம் மண்ணுக்குள் புதைந்ததில், 10 பேர் உயிரிழந்தனர்; 90க்கும் மேற்பட்டோரை காணவில்லை என, அந்நாட்டின் ராணுவ அமைச்சர் பும்தம் வெசாயசாய் தெரிவித்தார்.

இந்தியா உதவிக்கரம்

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கை:மியான்மர், தாய்லாந்தில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் கவலை அளிக்கிறது. அந்நாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக பிரார்த்திக்கிறேன். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது. உதவிக்கரம் நீட்ட தயார் நிலையில் இருக்கும்படி நம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரு நாட்டு அரசுகளுடனும் நம் வெளியுறவுத்துறை தொடர்பில் உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.நிவாரணம் அனுப்பிய இந்தியா!கடும் நிலநடுக்கத்தால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் மியான்மருக்கு, அவசர உதவியாக, 15 டன் நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி உள்ளது.கடந்த 30 ஆண்டுகளில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய நிலநடுக்கங்கள்!1993 செப்., 29மஹாராஷ்டிராவில் 9,748 பேர் பலி 2001 ஜன., 26குஜராத்தில், 20,000 பேர் பலி 2003 டிச., 26 ஈரானின் கெர்மன் மாகாணத்தில் 26,271 பேர் பலி 2005 அக்., 8பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 75,000 பேர் பலி 2008 மே 12 சீனாவின் சிச்சுவானில் 87,587 பேர் பலி 2010 ஜன., 12ஹைதியில் 1.60 லட்சம் பேர் பலி 2011 மார்ச் 11ஜப்பானின் டுஹோகு பகுதியில் 19,759 பேர் பலி 2023 பிப்., 6துருக்கி - சிரியா எல்லையில் 59,259 பேர் பலி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

M. PALANIAPPAN, KERALA
மார் 29, 2025 10:47

15 டன் நிவாரண பொருட்களை உடனடியாக முதன் முதலாக மியான்மருக்கு அனுப்பிய இந்தியா உலக நன்மைக்கு எப்பொழுதும் முன்பந்தியில் உள்ள இந்தியா வாழ்க பாரதம் ஜெய் ஹிந்த்


B MAADHAVAN
மார் 29, 2025 09:34

எந்த நாடு ஆக இருந்தாலும், மியான்மர், தாய்லாந்து ஆக இருந்தாலும் நம் தாய் நாடு ஆக பாவித்து, அவர்களுக்கு உதவுவது தான் நம் பாரதப் பண்பாடு. கொரானா காலத்தில் உலகுக்கே மருந்துகள் அனுப்பி பல உயிரை காப்பாற்ற உதவிய பெருந்தன்மை கொண்டது தான் நம் பாரத நாடு. உடனடி நடவடிக்கைகள் எடுத்து தக்க சமயத்தில் உதவிய நம் மத்திய அரசிற்கு பாராட்டுகள். இறையருளால், அந்நாடுகள் மீண்டும் பழைய நிலைக்கு விரைந்து முன்னேற அன்பு பிரார்த்தனைகள். நாடு வளம்பெற, உலகம் நலம் பெற பிரார்த்திப்போம்.


Ramaswami Venkatesan
மார் 29, 2025 08:57

இயற்கை இடர்பாடுகள் எங்கு நடந்தாலும் துக்கம் துயரம் தான். எல்லாம் வல்ல இறைவன் நிலைமை திரும்ப அருள் புரியட்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை