உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா வருகிறேன் எலான் மஸ்க் அறிவிப்பு

இந்தியா வருகிறேன் எலான் மஸ்க் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க தொழிலதிபரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க், பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியதை கவுரவமாக கருதுவதாகக் கூறியுள்ளார். மேலும், இந்தாண்டில் இந்தியாவுக்கு நிச்சயம் வருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.உலக நாடுகள் மீது வரி போரை அமெரிக்கா நடத்தி வருகிறது. சீனாவுக்கு, அதிகளவு வரியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கான வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.இதற்கிடையே, வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக, அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே பேச்சு நடந்து வருகிறது.இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு, நிர்வாக சீர்திருத்தம் தொடர்பான ஆலோசனை வழங்கி வரும் தொழிலதிபர் எலான் மஸ்க், பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று முன்தினம் தொலைபேசி வாயிலாக பேசினார்.கடந்தாண்டு பிப்ரவரியில், மோடி அமெரிக்கா சென்றபோது, எலான் மஸ்க்கை சந்தித்து பேசினார். எலான் மஸ்கின், மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான, 'டெஸ்லா' மற்றும் செயற்கைக்கோள் வாயிலாக இன்டர்நெட் சேவை வழங்கும், 'ஸ்டார்லிங்க்' ஆகியவை இந்தியாவில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன.இது தொடர்பாக, இருவரும் பேசியதாக, தகவல்கள் வெளியாகின.இந்நிலையில், சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், 'பிரதமர் மோடியுடன் பேசும் கவுரவம் கிடைத்தது. இந்தாண்டில் இந்தியாவுக்கு நிச்சயம் வருகிறேன்' என, எலான் மஸ்க் கூறியுள்ளார்.கடந்தாண்டே அவர் இந்தியா வருவதாக இருந்தது. ஆனால், பணிச்சுமையால் அதை ஒத்திவைப்பதாக கூறியிருந்தார். அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு நடக்கும் நிலையில், எலான் மஸ்க், பிரதமர் மோடியுடன் பேசியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஜெய்ஹிந்த்புரம்
ஏப் 20, 2025 08:24

அமெரிக்காவில் விரட்டி விட்டார்கள். டெஸ்லா கார் விற்பனை படு பாதாளத்தில் விழுந்து விட்டது. பலநூறு பில்லியன் டாலர் கடன் முதலாளியை மிரட்டுகிறது. எப்படியாவது இந்தியாவில் கடையை திறந்து கல்லா கட்டலாம் என்று வருகிறார்.


RAMAKRISHNAN NATESAN
ஏப் 20, 2025 12:50

அவருடைய பிசினஸ் சாம்ராஜ்ஜியம் டெஸ்லா உற்பத்தியுடன் நின்றுவிட்டதா ?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 20, 2025 08:01

மைய அரசின் முயற்சியால் நல்லதே நடக்கும் .... அவருடன் ஒப்பந்தம் ஏற்பட்டால், அவரது முதலீடு / ஒத்துழைப்பு இங்கே ஏற்பட்டால் பலருக்கும் எரியும் ....


Appan
ஏப் 20, 2025 06:35

Associating with the Donald Trump administration’s multibillionaire adviser Elon Musk and misusing artificial intelligence are among the most surefire ways for companies to damage their brands, a new survey of more than 100 international public affairs leaders found.


RAMAKRISHNAN NATESAN
ஏப் 20, 2025 12:51

There is NO full and final AI regulation policy, or at least drafted one, with any country. How do you say he or any other abusing AI ?


Appan
ஏப் 20, 2025 06:08

இலான் மாஸ்க் ஒரு திவாலான தொழில் அதிபர். அவருடைய டெஸ்லா இவி காரை இப்போ யாரும் வாங்குவது இல்லை. அப்படி இருக்கையில் அவர் இங்கு தொழில் தொடங்கிவைத்தால் யாருக்கு நன்மை ?இப்போ அமெரிக்காவே ஆட்டம் கொண்டு இருக்கிறது.. இதன் காரண கார்த்த இலான் மாஸ்க். இப்படி பட்டவரை இந்தியாவுக்குள் அனுமதிக்கலாமா ?. கெட்ட காலம் கெட்ட புத்தி.


மீனவ நண்பன்
ஏப் 20, 2025 02:47

தமிழ்நாட்டுக்கு வருகை தந்து மெரினாவில் மலர் வளையம் வைத்து வணங்கி முதல்வரின் ஆசி பெற்று பிரதமர் அவர்களை சந்திப்பார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை