உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அதிபர் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு; பின்வாங்கிய எலான் மஸ்க்

அதிபர் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு; பின்வாங்கிய எலான் மஸ்க்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அதிபர் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து, எக்ஸ் தளத்தில் தான் பதிவிட்ட பதிவை தொழிலதிபர் எலான் மஸ்க் நீக்கியுள்ளார்.அமெரிக்க அதிபர் டிரம்ப்- தொழிலதிபர் எலான் மஸ்க் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. டிரம்ப், எலான் மஸ்க் சமூக ஊடகங்களில் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருவதால் அமெரிக்க அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனிடையே, பாலியல் குற்றத்தில் சிக்கியுள்ள ஜெப்ரி எப்ஸ்டைன் தொடர்பாக வெளியிடப்படாத ஆவணங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பெயர் குறிப்பிடப்பட்டதாக எலான் மஸ்க் நேரடியாக குற்றம்சாட்டி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதன் காரணமாகவே பொதுவெளியில் ஆவணங்களின் விபரங்கள் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார். எலான் மஸ்க்கின் இந்த செயலால் அதிருப்தி தெரிவித்திருந்த வெள்ளை மாளிகை, அதிபர் டிரம்ப் மீதான இந்தக் குற்றச்சாட்டு மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று கூறியிருந்தது. இந்த நிலையில், அதிபர் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்த எக்ஸ்தளப் பதிவை எலான் மஸ்க் நீக்கியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

RAJ
ஜூன் 08, 2025 11:01

எப்டியோ நீங்க ரெண்டு பேரும் அடிச்சுகிட்டு சந்தி சிரிச்ச சரி... நாங்க எல்லாம் உழைக்கணுமாம்...இவனுக டாலர் மட்டும் பிரிண்ட் பண்ணி எஸ்ப்போர்ட் பண்ணுவாங்கலாம்.... டேய் .. சோம்பேறிங்களா... நாங்க விவசாயம், மருத்துவம், .. இப்புடி தொழில் செய்து gdp-ய ஓசத்தனுமாம் ... இவனுங்க வெடிகுண்டு.. அணுகுண்டு... கெமிக்கல் குண்டு.. ராக்கெட் லாஞ்சர்னு விற்று கொழுத்ததும் இல்லாம ... மற்ற நாடுகளை மிரட்டி சாப்பிடுவாங்கலாம்.... உங்களுக்கும் ஆப்பு வைக்க நேரம் வந்துருச்சு.. ..


Ramesh Sargam
ஜூன் 07, 2025 20:38

இந்த இருவரையும் நம்பவே முடியாது. இன்று அடித்துக்கொள்வார்கள். நாளை கூடி குலாவுவார்கள். மீண்டும் அடித்துக்கொள்வார்கள். மக்கள் இவர்கள் சம்பந்தப்பட்ட செய்திகளை படிப்பதை நிறுத்தவேண்டும். நாளிதழ்களும் இவர்கள் சம்பந்தப்பட்ட செய்திகளை பிரசுரிப்பதை தவிர்க்கவேண்டும்.


Ganapathy
ஜூன் 07, 2025 18:34

இவன் நமக்கும் ஆபத்தானவன். இவனது முதலீடு நம்மோடு ட்ரம்பின் எதிர்புக்கு வழிவகுக்கும். இவனைப் போன்றவனின் முதலீடுகள் நமக்கு தேவையில்லை.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 07, 2025 17:53

கிட்டத்தட்ட நம்ம ஊரு அரசியல்வாதிகள் ரேஞ்சுக்கு வந்துட்டாங்க ....


மீனவ நண்பன்
ஜூன் 07, 2025 17:44

அந்த சமாச்சாரத்தில் ஒருவருக்கு மற்றவர் சளைத்தவர் அல்ல ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை