உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எலான் மஸ்க் தான் என் குழந்தைக்கு அப்பா; பிரபல பெண் எழுத்தாளர் பகீர்

எலான் மஸ்க் தான் என் குழந்தைக்கு அப்பா; பிரபல பெண் எழுத்தாளர் பகீர்

வாஷிங்டன்: ததனக்கு பிறந்துள்ள குழந்தைக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் தான் தந்தை என்று பிரபல பெண் எழுத்தாளர் ஆஷ்லே செயின்ட் கிளேர் கூறியுள்ளார்; ஏற்கனவே எலான் மஸ்க்கிற்கு 3 முறை திருமணம் ஆகி, 11 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் அரசு நிர்வாகத்தில் முக்கிய பாங்காற்றி வருகிறார். தொழிலதிபராக திகழ்ந்து வரும் மஸ்க், தற்போது தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். எலான் மஸ்க்கிற்கு மூன்று திருமணங்கள் நடந்தது. 11 குழந்தைகள் உள்ளனர். முதல் மனைவி ஜஸ்டின் வில்சனுக்கு 5 குழந்தைகளும், 2வது மனைவி க்ரீம்ஸ்க்கு 3 குழந்தைகளும், 3வது மனைவி ஷிவோன் ஷில்லிஸ்க்கு 3 குழந்தைகளும் உள்ளனர். முதல் 2 மனைவிகளை விட்டு பிரிந்து, 3வது மனைவியுடன் ஷிவோனுடன் தற்போது குடும்பம் நடத்தி வருகிறார்.இந்த நிலையில், எழுத்தாளரும், பழமைவாத சிந்தனை கொண்டவருமான 31 வயதான ஆஷ்லே செயின்ட் கிளேர் என்பவர், தனக்கு பிறந்துள்ள 5 மாதக் குழந்தைக்கு எலான் மஸ்க் தான் தந்தை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில், '5 மாதங்களுக்கு முன்பு என்னுடைய குழந்தையை இந்த உலகிற்கு வரவேற்றேன். என் குழந்தைக்கு எலான் மஸ்க் தான் தந்தை. குழந்தையின் பாதுகாப்பு காரணமாக, இந்த விவகாரத்தை ஆரம்பத்தில் வெளியே சொல்லாமல் இருந்தேன். இது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் கசிய தொடங்கியதால், தற்போது வெளியே சொல்ல முடிவு செய்தேன். எனது குழந்தை இயல்பான மற்றும் பாதுகாப்பான சுற்றுச்சூழலில் வளர வேண்டும் என்பதே எனது நோக்கம். ஊடகங்கள் எங்கள் குழந்தையின் தனியுரிமையை மதிக்க வேண்டும். தேவையில்லாத தகவல்களை தவிர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்,' இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இவரது இந்தப் பதிவுக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களையும், ஆதரவுகளையும் கூறி வந்த நிலையில், எலான் மஸ்க் இதுவரையில் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்தப் பதிவை போட்ட பிறகு சுமார் 3 மணிநேரம் கழித்து ஆஷ்லே செயின்ட் கிளேர், 'தனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி.குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பதால், தற்போது எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறுகிறேன்,' எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

PR Makudeswaran
பிப் 15, 2025 20:16

பத்தோட பதினொன்னு . இதுவும் ஒண்ணு.சரி கண்ணு.


என்றும் இந்தியன்
பிப் 15, 2025 18:48

டிரம்ப் இந்த மாதிரி கேஸிலிருந்து விடிவுப்பு ஜோ பைடன் மகனும் விடுவிப்பு ஆகவே கவலை வேண்டாம் எலான் மாஸ்க் உன்னை கைது செய்யமுடியாது அமெரிக்காவில்??? ஏன்னா அமெரிக்கா திருட்டு திராவிட மாடலை பின்பற்றுகின்றது நம்மூரு அநீதிமன்றம் அநீதிபதிகள் போல


Jay
பிப் 15, 2025 18:00

ராமசாமியை விடவும் மோசமான ஆசாமியா இருப்பாரோ?


பாலா
பிப் 15, 2025 21:14

திராவிடியமரபணு சொறியன் கொலையன் >>>


jaya
பிப் 17, 2025 12:47

அனைவரும் பல குழந்தைகளைப்பெறவேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகிறார் . இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதை ஒரு இன்டர்நேஷனல் நிகழ்ச்சியில் , பெண் நிருபர் கேட்டார் . நான் போதிப்பது மட்டுமல்ல செயலிலும் பின் பற்றுபவன் என்று கூறினார் . நம் நாட்டை போலில்லாமல் , பல நாடுகளில் ஜனத்தொகை குறைந்து கொண்டே வருகிறது . அதற்காக இவர் பேசுகிறார்.


ஆரூர் ரங்
பிப் 15, 2025 14:26

அது எனக்குப் பிறந்த மகளே அல்ல என்று கட்டுமரம் பாணியில் சமாளிக்கலாம். கோர்ட்டு கேஸ் என வந்தால் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 15, 2025 14:15

தலைப்பை எடிட்டு பண்ணுங்க தல ..... இதுல எங்களுக்கென்ன பகீர் ??


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 15, 2025 14:13

ஒருவேளை மஸ்க்கு நூத்துக்கு இருநூறு மார்க்கு வாங்குறவரா இருப்பாரோ ??


R S BALA
பிப் 15, 2025 13:50

எலன் மறுத்தால் DNA சோதனை செய்ய வேண்டியதுதான்..


Barakat Ali
பிப் 15, 2025 13:38

அண்ணணுக்கு ரிட்டைர்மெண்ட்டே இல்லன்னு புரியுது .......


Venkatesan Srinivasan
பிப் 16, 2025 22:37

ஏராள "மஸ்த்" என பெருமையாக அறியப்படுவார்.


sankaranarayanan
பிப் 15, 2025 13:37

எளாண் மாஸ்க்குக்கு எத்தனை மனைவிமார்கள் இருந்தால் என்ன எத்தனை புள்ளைகள் இருந்தால் என்ன இதெல்லாம் ஒரு முக்கியமான செய்தியா மக்களுக்கு


இளந்திரையன் வேலந்தாவளம்
பிப் 15, 2025 13:26

காசு பணம் துட்டு மணி மணி..... No money no honey....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை