உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீக்கிய யாத்ரீகர்களுக்கு விலக்கு: பாகிஸ்தான் தந்திரம்

சீக்கிய யாத்ரீகர்களுக்கு விலக்கு: பாகிஸ்தான் தந்திரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேற உத்தரவிட்டுள்ள அந்நாடு, சீக்கியர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து உள்ளது. இதன் பின்னணியில் அந்நாட்டிடம் உள்ள பிரிவினைவாத சதி அம்பலமாகி உள்ளது.சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கின் பிறப்பிடம் என்பதால், பாகிஸ்தானில் உள்ள ஜனமஸ்தான் நான்கானா சாஹிப் குருத்வாராவுக்கு ஆண்டுதோறும் சீக்கியர்கள் அங்கு செல்வார்கள். மேலும் சீக்கிய மதம் தொடர்பான சில இடங்கள் பாகிஸ்தானில் உள்ளது. இதனால், ஆண்டுதோறும் 3 ஆயிரம் சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் அரசு விசா வழங்க வருகிறது. அதேநேரத்தில் சீக்கியர்களுக்கு என தனி நாடு கோரி காலிஸ்தான் பயங்கரவாதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு இந்திய அரசு தடை விதித்து உள்ளது. இதனால், இவர்கள் கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் அடைக்கலம் புகுந்து அங்கிருந்த படி இந்தியாவுக்கு எதிராக செயல்படுகின்றனர்.காஷ்மீரில் பயங்கரவாதிகளை தூண்டிவிட்டு மறைமுக யுத்தம் நடத்தி வரும் பாகிஸ்தான், இந்தியாவிற்கு மேலும் பிரச்னைகளை கொடுக்க வேண்டும் என்பதற்காக காலிஸ்தான் பயங்கரவாதிகளையும் ஆதரித்து வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் சிலர் பாகிஸ்தானில் உள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை பாகிஸ்தானே செய்து கொடுக்கிறது.இந்நிலையில், காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதற்கு பதிலடி கொடுக்க நினைத்து பாகிஸ்தானும், இந்தியர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. இதில் சீக்கியர்களுக்கு மட்டும் விலக்கு அளித்து உள்ளது.இதன் பின்னணியில் உள்ள பாகிஸ்தானின் தந்திரம் குறித்து வெளியாகி உள்ள தகவல்: இந்தியாவில் இருந்து ஏராளமனோர் தொழில், கல்வி, குடியேற்றம் என ஏராளமான வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். ஆனால், அப்படி செல்பவர்கள் வறுமையில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு செல்வது என்பது அரிதான ஒன்று. சீக்கியர்கள் மட்டுமே ஆன்மிக யாத்திரையாக பாகிஸ்தான் செல்கின்றனர். தங்களது பயணம் முடிந்த உடன் அவர்கள் தாங்களாகவே இந்தியா திரும்பி விடுவர். ஆனால், தற்போது அந்நாட்டில் இருந்து வெளியேற சீக்கியர்களுக்கு விலக்கு அளித்துள்ளது சந்தேகத்தை கிளப்புகிறது. காலிஸ்தான் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஆதரித்து வருகிறது. தற்போது, அவர்களையும் வெளியேற உத்தரவிட்டால் விஷயம் வேறு மாதிரி ஆகிவிடும். காலிஸ்தான் பயங்கரவாதிகள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் என அந்நாடு நினைக்கலாம். இவ்வாறு அந்த தகவலில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

மூர்க்கன்
ஏப் 28, 2025 10:44

சதியை சில சமயம் சதியால் மட்டுமே வெற்றி கொண்டு சாதிக்க முடியும் மஹாபாரதத்தில் தேவையான அளவுக்கு முன் உதாரணங்கள் இருக்கிறது. உண்மையான போர் தந்திரம் என்னவெனில் நம் அண்டை நாடாக இரண்டு முக்கியமான நாடுகள் இருக்கிறது என்று வைத்து கொள்ளுங்கள் அதில் யாரிடம் நமக்கு பிரச்சினைகள் குறைவாக இருக்கிறதோ அவர்களுடன் நட்பு பாராட்டி இன்னொரு நாட்டின் சதியை முறியடிக்க வேண்டும். இந்தியாவின் அயலுறவுத்துறையின் செயல்பாடுகள் கடந்த பல தசாப்தங்களாகவே மெச்சும்படி இல்லை .


Karthik
ஏப் 25, 2025 10:13

ஒருவேளை போர் என்று வந்தால் அங்குள்ள சீக்கியர்களை பிணை கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக அறிவித்து இந்தியாவை மிரட்டவும் வாய்ப்பு இருக்கிறது அதற்கான யுத்தியாகவும் இருக்கலாம்.


Venkatesan Srinivasan
ஏப் 26, 2025 11:23

சீக்கிய மதம், குருநானக் அவர்களால் தம்மை சேர்ந்த இந்து மக்களை, முகலாய இஸ்லாமிய பயங்கரவாத ஆட்சியாளர்களிடம் இருந்து காப்பாற்றி கொள்ள போர் பயிற்சி அளிக்கப்பட்டு உருவாக்க பட்டது. சீக்கிய குருமார்கள் தேஜ் பகதூர், குரு கோவிந்த் சிங் ஆகியோர் முகலாயர்களால் கொல்லப்பட்டனர். எனவே சீக்கியம் ஒரு போதும் முகலாயர்களை ஏற்றுக் கொண்டதில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சீக்கியர்கள் பெருமளவு வாழும் பஞ்சாப் பிரதேசம், பிரிவினை போது பிரிக்கப்பட்டு ஒரு பகுதி பாகிஸ்தானில் விடப்பட்டது. அங்கிருந்த சீக்கியர்கள் காலப்போக்கில் இஸ்லாமிய பாக்கிஸ்தானின் ஒடுக்கு முறைகளால் எண்ணிக்கையில் மிகமிக குறைந்து போனார்கள். சில முக்கியமான சீக்கியர்களின் வழிபாட்டு தலங்கள் பாகிஸ்தான் தரப்பு பஞ்சாபில் உள்ளன. தற்போது சீக்கிய காலிஸ்தான் தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆதரவு மற்றும் தூண்டுதலின் பேரில் தனிநாடு கோரி இந்தியாவுக்கு எதிராக செயல்படுகின்றனர். உண்மையில் இந்திய தரப்பில் உள்ள பஞ்சாப் பிரதேசத்தையும் கபளீகரம் செய்ய பாகிஸ்தான் செய்யும் சதி என்பதை சீக்கியர்கள் சரித்திரத்தை நன்கு உணர்ந்து தெரிந்து கொள்ள முடியும்.


Indian
ஏப் 25, 2025 06:27

சதியின் மூலம் யாரும் சாதிக்க முடியாது


மீனவ நண்பன்
ஏப் 25, 2025 03:01

பாகிஸ்தானில் தமிழர்கள் வசிக்கிறார்கள் .யு டியூபில் நிறைய வீடியோக்கள்


முக்கிய வீடியோ