உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாலஸ்தீனத்தில் இருந்து வெளியேறு: இஸ்ரேலை கண்டித்து ஐ.நா., தீர்மானம்: இந்தியா புறக்கணிப்பு

பாலஸ்தீனத்தில் இருந்து வெளியேறு: இஸ்ரேலை கண்டித்து ஐ.நா., தீர்மானம்: இந்தியா புறக்கணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐக்கிய நாடுகள் : '' பாலஸ்தீனத்தில் சட்டவிரேதமாக இருப்பதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்'', என இஸ்ரேலை கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேறி உள்ளது. இந்தியா உள்ளிட்ட 43 நாடுகள் இந்த தீர்மானத்தை புறக்கணித்தன.ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலை தொடர்ந்து, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை நிறுத்த வேண்டும் என பல நாடுகள் வலியுறுத்தியும் இது முடிவுக்கு வரவில்லை. இத்தாக்குதலால் பலர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். அப்பாவி மக்கள் பாதுகாப்பான இடம் நோக்கி வெளியேறி வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bcdzk828&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில், பாலஸ்தீனத்தில் சட்டவிரோதமாக இருப்பதை இஸ்ரேல் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தீர்மானம் நிறைவேறி உள்ளது. பாலஸ்தீனிய அதிகாரிகள் கொண்டு வந்த இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 124 ஓட்டுகள் கிடைத்தன. அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகள் எதிர்த்தன. இந்தியா உள்ளிட்ட 43 நாடுகள் புறக்கணித்தன.மேலும் இந்த தீர்மானத்தில், பாலஸ்தீனத்தில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்ரேலிய தூதர், ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மறுத்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Nandakumar Naidu.
செப் 19, 2024 09:49

ஐ நா சபை ஒரு உதவாக்கரை அமைப்பு. பற்கள் பிடுங்கிய பாம்பு.


veeramani
செப் 19, 2024 09:13

ஐ ஆ சபையா வேண்டாம் .. இஸ்ரேல் மக்கள் மெது முதலில் தாக்குதல் நடத்தியது ஹமாஸ் தீவிரவாதிகள். இவர்கள் தங்கியிருப்பது பாலசுதீனம். . ஹமாஸை கட்டுப்படுத்தாமல் இஸ்ரேலை எப்படி குறைசொல்வீர்கள். தீவிரவாதிகள் எங்கு உள்ளனரோ அங்கு சென்று தாக்குதல் நடத்தி முற்றிலும் அவர்களை அழிப்பது தானே நடையூரை. ஐ நா சபை யம் தீவிரவாதத்திற்கு துணை போகிறதா????


V SURESH
செப் 19, 2024 07:33

ஐ நா இது போல் நடந்து கொண்டால் , எந்த நாடும் அதை மதிக்காமல் சண்டையிட்டு கொண்டு தான் இருக்கும். இஸ்ரேல் பயப்படாது.


Gopinathan Anaimuthu
செப் 19, 2024 07:01

எதிர்த்து வாக்கு அளித்து இருக்கவேண்டும் இந்தியா எப்போதும் இஸ்ரேல் நண்பன் என்பதை உலகறிய தெரிவிக்க என்ன தயக்கமோ தெரியவில்லை.


N Sasikumar Yadhav
செப் 19, 2024 00:24

இஸ்லாமிய பயங்கரவாதத்தை வேரடி மண்ணோடு அழிக்கவேண்டும் உலகம் அமைதியாக இருக்க வேண்டும்


aaruthirumalai
செப் 18, 2024 23:17

ஒரு பய புள்ள மதிக்குதா. இருக்கறதுக்கு......


Jysenn
செப் 18, 2024 23:00

India should have opposed it. Abstaining is not a good decision.


புதிய வீடியோ