உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வி : பிரதமர் பிரசண்டா ராஜினாமா ?

நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வி : பிரதமர் பிரசண்டா ராஜினாமா ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காத்மாண்டு: நேபாளத்தில் கூட்டணி அரசு மீது பார்லி.யில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை ஓட்டெடுப்பில் பிரதமர் பிரசண்டா தலைமையிலான அரசு தோல்வியடைந்தது.நம் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்க வேண்டிய பெரும்பான்மை பலம் கிடைக்காமல் போனது. இதனால் சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தாஹல் பிரசண்டா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, மூன்றாவது முறையாக பிரதமராக, 2022ம் ஆண்டு டிச., 25ல் பதவியேற்றார்.அதன்பின் கூட்டணி அரசுக்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் திரும்ப பெற்றதையடுத்து, நேபாள காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பிரதமர் பதவியில் பிரசண்டா நீடித்தார்.இதற்கிடையே, நேபாளத்தில் மீண்டும் கூட்டணி மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேபாள காங்கிரசுடனான கூட்டணியை முறித்த பிரசண்டா, மீண்டும் சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். இக்கூட்டணி அரசு மீது கடந்த மார்ச் 15-ம் தேதி நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் பிரதமர் பிரசண்டா தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.இந்நிலையில் மீண்டும் பாராளுமன்றத்தில் நம்பிக்கை ஒட்டெடுப்பு இன்று (12.07.2024) நடைபெற்றது. இதில் மொத்தம் 275 உறுப்பினர்களில் பிரசண்டாவுக்கு ஆதரவாக 63 ஓட்டுகளும், எதிராக 194 ஓட்டுகளும் பதிவாகின. இதையடுத்து நம்பிக்கை ஓட்டெடுப்பில் பிரசண்டா தலைமையிலான அரசு தோல்வி அடைந்தது. பிரதமர் பதவியிலிருந்து பிரசண்டா விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ