உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நைஜீரியாவில் விவசாயிகள் சுட்டுக்கொலை

நைஜீரியாவில் விவசாயிகள் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாகர்: நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளால், விவசாயிகள் 40 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், தீவிர மதவாத சட்டங்களை அமல்படுத்த வலியுறுத்தி போக்கோ ஹராம் அமைப்பு 2009-ஆம் ஆண்டு முதல் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பொது இடங்களில் கூடும் அந்த அமைப்பினர், அவ்வப்போது அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல், பள்ளி செல்லும் சிறுவர் - சிறுமியரை கடத்துவதையும் அவர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.இங்கு, போர்னோ மாகாணத்தில் உள்ள கிராமத்தில் நேற்று புகுந்த போக்கோ ஹராம் தீவிரவாதிகள், கண்ணில் படுபவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், போர்னோ டம்பா சமூகத்தைச் சேர்ந்த 40 விவசாயிகள் கொல்லப்பட்டனர். இந்த தகவலை அந்த மாகாண கவர்னர் பாபாகானா உமாரா சுளும் உறுதிப்படுத்தினார்.இந்த அமைப்பு துவங்கப்பட்டதில் இருந்து இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் 35,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு பயந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.'பெண்கள் கல்வி பயிலக் கூடாது; ஆண்கள் மதக் கல்வியைத்தான் பெற வேண்டும்; இஸ்லாமியச் சட்டப்படிதான் ஆட்சி நடக்க வேண்டும், அனைவரும் இஸ்லாமிய மதத்தைத் தழுவ வேண்டும்' எனும் குறிக்கோள்களுடன் செயல்படும் இந்த அமைப்புக்கு, அல் - குவைதா அமைப்பின் ஆதரவு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

தமிழ்வேள்
ஜன 14, 2025 13:42

இவை தவிர வேறு எதையும் அதுகள் மூளை சிந்தனை செய்யாது..


பெரிய ராசு
ஜன 14, 2025 13:35

அமெரிக்கா களம் இறங்கவேண்டிய நேரம் இது, ஈவு இல்லாமல் இவனுகளை கொன்று இஸ்ரேல் செய்வது போல செய்யவேண்டும்


kulandai kannan
ஜன 14, 2025 12:34

அய்யாகண்ணுவைப் பிடித்து நைஜீரியாவுக்கு அனுப்ப வேண்டும்.


மணியன்
ஜன 14, 2025 11:50

வயிற்றுக்கு சோறிடும் விவசாயிகளை கொல்லும் மதம் இங்கே உள்ள போலிமதசார்பின்மை பேசுபவர்களால் பாதுகாக்கப்படுகிறது.


lana
ஜன 14, 2025 11:18

அதெல்லாம் சரி. வெறுமனே மத கல்வி படித்து எதற்கு நவீன ஆயுதங்கள் மற்றும் வாகனங்கள். மாடு கம்பு கத்தி மட்டுமே பயன்படுத்த லாம்


R. SUKUMAR CHEZHIAN
ஜன 14, 2025 10:36

கோத்ரா இரயில் எரிப்பு தான் ஞாபகம் வருகிறது. இந்த காட்டு மிராண்டி கூட்டங்கள் இருக்கும் இடங்களில் அமைதி மற்றும் நல்லிணக்கம் இருக்காது.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 14, 2025 09:42

நைஜீரிய விவசாயிகளுக்கு கவலையுடன் ....


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 14, 2025 09:35

பெண்கள் கல்வி பயிலக் கூடாது ஆண்கள் மதக் கல்வியைத்தான் பெற வேண்டும் இஸ்லாமியச் சட்டப்படிதான் ஆட்சி நடக்க வேண்டும், அனைவரும் இஸ்லாமிய மதத்தைத் தழுவ வேண்டும் - ஆஹா என்னே ஒரு சிறப்பான கொள்கை வாழ்க


Kumar Kumzi
ஜன 14, 2025 08:59

ஒழிந்தால் தான் இவ்வுலகுக்கு விமோசனம் கிடைக்கும்


Srinivasan Narasimhan
ஜன 14, 2025 08:14

மதம் பிடித்தவர்களுக்கு மதம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை