உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா மீது வரி விதிப்பை கண்டித்த டிரம்ப் முன்னாள் ஆலோசகர் வீட்டில் எப்.பி.ஐ., ரெய்டு

இந்தியா மீது வரி விதிப்பை கண்டித்த டிரம்ப் முன்னாள் ஆலோசகர் வீட்டில் எப்.பி.ஐ., ரெய்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: இந்தியா மீது கூடுதலாக வரி விதிப்பை கண்டித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முன்னாள் ஆலோசகர் வீட்டில் எப்.பி.ஐ., புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்பின் முன்னாள் ஆலோசகராக இருந்தவர் ஜான் போல்டன், வாஷிங்டனில்உள்ள இவரது வீடு, அலுவலகத்தில் அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அமைப்பின் அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.இந்த ரெய்டு குறித்த பின்னணியில் நடந்த விசாரணையில், அமெரிக்க அதிபர் ஒரு பகுத்தறிவற்றவர் என ஜான் போல்டன் விமர்சனம் செய்ததுடன், ஒரு இந்திய பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவீதம் என 50 சதவீதம் வரை வரி விதித்து அறிவிப்பு வெளியிட்ட அதிபர் டிரம்ப்பை கண்டித்தார். இதன் எதிரொலியாகத்தான் அவரது வீட்டில் ரெய்டு நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ரெய்டு நடைபெற்ற ஜான் போல்டன் இல்லத்தில் ஏராளமான ஆவணங்களை புலானய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.முன்னதாக டெனால்டு டிரம்ப் அதிபராக பதவியேற்றவுடன் கடந்த பிப்ரவரியில் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., இயக்குனராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ்யப் படேலை நியமித்து டிரம்ப் உத்தரவு பிறப்பித்தார். காஷ்யாப் படேல் உத்தரவின் பேரில் இந்த ரெய்டு நடைபெற்றதுள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

kumaran
ஆக 22, 2025 22:00

விமர்சனங்கள் கூட இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் பொறாமைபடும் அளவுக்கு முன்னேறி கொண்டு இருக்கிறது காங்கிரஸ் ஆட்சியையும் இந்த ஆட்சியையும் ஒப்பிட திரானி அற்றவர்கள் மதக்கண்ணாடி வழியாக இந்தியாவை புனைப்பெயர்களில் விமர்சிக்கின்றனர் என்பது தான் உண்மை


sankaranarayanan
ஆக 22, 2025 20:24

அமெரிக்க அதிபர் ஒரு பகுத்தறிவற்றவர் என ஜான் போல்டன் விமர்சனம் செய்ததுடன், ஒரு இந்திய பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவீதம் என 50 சதவீதம் வரை வரி விதித்து அறிவிப்பு வெளியிட்ட அதிபர் டிரம்ப்பை கண்டித்தார். இதைப்பார்த்தால் திராவிட மாடல் அரசு செய்வதைப்போன்றுதான் இருக்கிறது வாயைத்திறந்தால் கைது நீதி மன்ற விசாரணை இன்னும் பல பல


Sun
ஆக 22, 2025 20:20

இங்கு அமலாக்கத் துறை ரெய்டு போல் அங்கு எப்.பி.ஐ ரெய்டு.


Ramesh Sargam
ஆக 22, 2025 20:15

ட்ரம்ப் கூட ஒரு சராசரி இந்திய அரசியல்வாதியைப்போல நடந்துகொள்கிறார். வேண்டாதவர்கள் மீது ரைடு.


nisar ahmad
ஆக 22, 2025 20:14

அங்கு எப் பி ஐ வைத்து டிரம்ப் மிரட்டுகிறார்.


Tamilan
ஆக 22, 2025 20:07

இந்தியாவை நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா கூட மதிப்பதில்லை .


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஆக 22, 2025 20:29

இந்தியா போடும் உப்பை தின்னுட்டு சொந்த மண்ணுக்கு துரோகம் செய்யும் உம்மை போல் மூர்க்கன் இங்க இருக்கும் போது அமெரிக்கா அப்படி தான் செய்யும்


M Ramachandran
ஆக 22, 2025 20:03

நெஞ்சு பொறுக்குதில்லையையே இந்த நிலை கெட்ட மனிதர்களை நினைத்து விட்டால்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை