உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரானில் மாயமான 400 கிலோ யுரேனியம்! அமெரிக்கா தகவல்

ஈரானில் மாயமான 400 கிலோ யுரேனியம்! அமெரிக்கா தகவல்

வாஷிங்டன்: ஈரான் வைத்து இருந்த 400 கிலோ செறியூட்டப்பட்ட யுரேனியும் எங்கே போனது என்று தெரியவில்லை என அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாயமான இந்த யுரேனியம் மூலம் 10 அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும் என தெரிகிறது.அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி ஈரான் மீது கடந்த இரண்டு வாரமாக இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வரும் நிலையில், நேற்று முன்தினம் அந்நாட்டின் முதன்மையான மூன்று அணுசக்தி நிலையங்களான போர்டோவ், நடான்ஸ், மற்றும் இஷாஹன் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இது பதற்றத்தை அதிகரித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=s8ni5439&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: ஈரான் சேமித்து வைத்து இருந்த 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் எங்கே போனது என தெரியவில்லை. அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் சேதம் அடைந்து இருக்கும்.அல்லது அழிந்திருக்கும். ஆனால், அதனை உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.போர்டோவ் அணுசக்தி நிலையத்தை அழிப்பதே தாக்குதலின் நோக்கம். மற்ற நிலையங்களுக்கும் சேதம் ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டோம். தாக்குதலில், போர்டோவ் அணுசக்தி நிலையத்திற்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டு இருக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு முன்னர், யுரேனியத்தை பாதுகாப்பான இடங்களுக்கு ஈரான் மாற்றியிருக்கக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் போர்டோவ் அணுசக்தி நிலையங்கள் முன்பு 16 டிரக்குகள் வரிசையில் நின்றது செயற்கைகோள் எடுத்த புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது. தாக்குதலுக்கு பிறகு அந்த இடத்தில் அந்த டிரக்குகள் காணப்படவில்லை. அதில் என்ன கொண்டு செல்லப்பட்டது என தெரியவில்லை என அமெரிக்க நாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது.

ஈரானிடம் திறன் இல்லை

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் தொடர்பாக, ஜே.டி.வான்ஸ் அளித்த பேட்டி: முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் தற்போது அதில் இருக்கும் உபகரணங்களைப் பயன்படுத்தி அணு ஆயுதத்தை உருவாக்க இயலாது. ஈரானிடம் இப்போது அணு ஆயுதங்களை உருவாக்கும் திறன் இல்லை. ஏனெனில் நாங்கள் அதை அழித்தோம். எந்த சந்தேகமும் இல்லாமல், ஒரு அமெரிக்கர் உயிரிழப்புடன், ஈரானின் அணுசக்தி திட்டத்தை அதிபர் டிரம்ப் அழித்துவிட்டார். மேம்பட்ட செறிவூட்டல் உள்கட்டமைப்பை அழித்ததன் மூலம் ஈரானின் திறன்கள் பல ஆண்டுகளுக்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது . நாங்கள் ஈரானுடன் போரில் ஈடுபடவில்லை. ஈரானின் அணுசக்தி திட்டத்துடன் நாங்கள் போரில் ஈடுபட்டோம். அவர்கள் மீண்டும் அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சித்தால், அவர்கள் மிகவும் சக்திவாய்ந்த அமெரிக்க ராணுவத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Vijay D Ratnam
ஜூன் 24, 2025 22:11

இந்த அமேரிக்காக்காரன் எதையும் முழுசா முடிக்கமாட்டான். குற்றுயிரும் குலையுயிருமா உட்டுட்டு போவான். மாயமான 400 கிலோ யுரேனியம் கிடைக்கும் வரை ஈரானை போட்டு பொளக்க வேண்டியதுதானே. எவ்ளோ ஆயுதங்கள் கண்டு பிடிச்சி வச்சிருக்கானுவோ அத்தயெல்லாம் எங்கிட்டு போய் டெமான்ஸ்ட்ரேஷன் செய்றது. பிரிட்டன்லயும் பிரான்ஸ்லயும் ஜெர்மனிலயும் செய்யமுடியுமா. முட்டு சந்துல மாட்டுன தெருநாய் மாதிரி வசமாக சிக்கிய ஈரான் மாதிரி அடிமாடுகளிடம்தானே காட்ட முடியும். ஒருவேலையை உருப்படியா முடிக்க மாட்டானுங்க. அட்லீஸ்ட் டெஹ்ரானை மட்டுமாவது பிளாட் போடுற மாதிரி செஞ்சிட்டு போறத உட்டுப்போட்டு. அமேரிக்கா தானும் படுக்க மாட்டான் தள்ளியும் அடுக்க மாட்டான். யோவ் ட்ரம்ப்பு மாமா அதான் ரெண்டு நாளைக்கு முன்னாடியே பெஞ்சமின் நெதன்யாகு அந்த ஈரான் கிழவன் கோமெனி இருக்குற இடம் தெரியுது, மண்டைல குண்ட இறக்கிடவான்னு கேட்டான்ல. வேணாம் வேணாம் நீ அப்படி செஞ்சா போரை நடத்த முடியாது. போரை நிறுத்துறமாதிரி ஆயிடும், அவனை விடுன்னு சொல்லிட்டு இப்போ சீஸ்ஃபயர்னு பெனாத்துர. சரி டிரம்ப்பு மாமா அடுத்தது துருக்கியா பாகிஸ்தானா கரெக்ட்டா சொல்லுயா.


GoK
ஜூன் 24, 2025 19:16

யூதர்கள், கிருத்துவர்கள், இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்கள், பாரிஸ/புத்த மதத்தினர், நாத்திகர்கள்...எவரெல்லாம் இஸ்லாமியர்கள் இல்லையோ அவர்கள் நீக்கப் பட வேண்டும் என்பது அவர்கள் ஆண்டவர், வேறு ஆண்டவர் யாருமில்லை, கட்டளை. புத்தகத்தில் எழுதியிருக்கிறதே...பாவம் என்ன செய்வார்கள்


Haja Kuthubdeen
ஜூன் 24, 2025 19:08

கண்டு பிடிக்க முடியலையா....ஈரான் எந்த நோக்கத்திற்காக செரிவூட்டியதோ அது நிறைவேறும் வரை விடாது....இரானை சுற்றி பல நாடுகள் இருந்தாலும் அவர்கள் அனைவரிடமும் நட்புடன்தான் இருக்கிறார்கள்.இந்தியாவிடமும் நட்புதான்.அவர்களின் ஒரே எதிரி இஸ்ரேல் மட்டுமே...


ஆரூர் ரங்
ஜூன் 24, 2025 22:09

எல்லா அரபு நாடுகளும் ஈரானை பெரும் எதிரியாகவே நினைக்கின்றனர். காரணம் ஈரான் ஷியா நாடு. இப்போ ஈரானுக்கு எந்த அரபு நாடும் உதவ முன்வரவில்லை. இங்குள்ள அறிவிலிகள் மட்டுமே ஆதரிக்கின்றனர்.


Venkataraman
ஜூன் 24, 2025 18:14

ஈரான் இனிமேல் அணுகுண்டு தயாரிக்க முடியாது என்று சொல்ல முடியாது. வேறு ஒரு மறைவான இடத்தில் அணுகுண்டு தயாரிப்பார்கள். அந்த 400 கிலோ யுரேனியம் பத்து அணுகுண்டுகளை தயாரிக்க போதுமானது. அதை தயாரிக்க சீனாவும். ரஷ்யாவும் மறைமுகமாக ஈரானுக்கு உதவிசெய்யும். சீனா ஏற்கனவே வடகொரியாவுக்கு அணுகுண்டு தயாரிக்க உதவியிருக்கிறது.


naranam
ஜூன் 24, 2025 18:10

அதான் பாகிஸ்தானில் ஒசாமா ஒளிந்திருந்த அபட்டாபாதில் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கசிந்துள்ளதே!


Tetra
ஜூன் 24, 2025 18:04

முதலில் அமெரிக்காவும் ,ரஷ்யாவும்,சைனாவும் தங்களது அணு ஆயுதங்களை ஒழிக்கட்டும். மற்றவர்கள் தாங்களே ஒழித்து விடுவார்கள்


SakthiBahrain
ஜூன் 24, 2025 17:54

நீங்க தாக்குவீங்கன்னு ஈரான் முன்னாடி எடுத்து ஒளிச்சு வச்சிட்டு இருக்கு ,, நீங்கள் எல்லாம் சும்மா...வாய்ச்சவடால்... .ஈரான் ஒருபடி மேல... ஈரான் கெத்தே வேறு.. ஈரான் செயல் வீரன்..காலம் போகட்டும் பின்பு பார்க்கலாம்...


Rathna
ஜூன் 24, 2025 17:44

பாகிஸ்தானை போல ஈரானும் ஒரு தீவிரவாதிகள் நாடு. ஹமாஸ், ஹௌதி, இஸ்லாமிய பிரதர்ஸ் போன்ற அமைப்புகளுக்கு ஆதரவும் பணஉதவியும் அளிக்கும் நாடு. இந்த தீவிரவாதிகள் கையில் அணு ஆயுதம் கிடைத்தால் மனித இனத்திற்கே கேடு.


சேகர்
ஜூன் 24, 2025 17:29

மோடி ஜி கனடாவில் டிரம்ப் இடம் தொலைபேசியில் பேசினார் என்ற போதே நான் நினைத்தேன் .. மோடி ஜி கட்டளையிட்டிருப்பார் ன்று . உலக ஆளுமையான மோடி ஜி சொல்வதை தவிர கேட்க வேறு வழி இல்லை டிரம்ப் க்கு....


Senthoora
ஜூன் 24, 2025 17:26

இன்று இரான் யுரேனியம் செறிவூட்டல் செய்யாமல் இருந்திருந்தால், அமெரிக்காவும், இஸ்ரேலுடன் சேர்ந்து இந்தியாவை யுரேனியம் செறிவூட்டுதலுக்கு எதிராக களம் இறங்கி இருக்கும். ஆசிய நாடுகள் அணுஆயுதத்தை தயாரிப்பதில் அமெரிக்க விரும்புவதில்லை.


ஆரூர் ரங்
ஜூன் 24, 2025 17:44

ஆசிய நாடு என்பது பிரச்சனையல்ல. மதவாத சர்வாதிகாரியிடம் அணு ஆயுதமிருப்பது மிகவும் ஆபத்தானது என்பது. ஈரான் அலியின் ஒரு நிமிட தடுமாற்றம் உலகத்துக்கே அழிவை ஏற்படுத்தி விடும் ஆபத்துண்டு.