உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வீட்டில் இருப்பது போல் உணர்கிறேன்: எத்தியோப்பியா பார்லியில் பிரதமர் மோடி பேச்சு

வீட்டில் இருப்பது போல் உணர்கிறேன்: எத்தியோப்பியா பார்லியில் பிரதமர் மோடி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அடிஸ் அபாபா: ''எத்தியோப்பியாவும், எனது சொந்த மாநிலமான குஜராத்தும் சிங்கங்களின் தாயகமாக இருப்பதால், வீட்டில் இருப்பது போல் உணர்கிறேன்'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dlw2b3rh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எத்தியோப்பியா பார்லிமென்டில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்திய மக்களின் சார்பாக, உங்கள் முன் நிற்பது எனக்குக் கிடைத்த பாக்கியம். சிங்கங்களின் பூமியான எத்தியோப்பியாவில் இருப்பது மிகவும் அருமையாக இருக்கிறது. நான் வீட்டில் இருப்பது போல் உணர்கிறேன். எனது சொந்த மாநிலமான குஜராத்தும் சிங்கங்களின் தாயகமாகும். இந்தியாவின் தேசிய பாடலான 'வந்தே மாதரம்' மற்றும் எத்தியோப்பியாவின் தேசிய கீதம் இரண்டும் நமது நிலத்தை தாய் என்று குறிப்பிடுகின்றன.

நட்பு, சகோரத்துவம்

அவை பாரம்பரியம், கலாசாரம், அழகு ஆகியவற்றில் பெருமை கொள்ள நம்மைத் தூண்டுகின்றன. மேலும் தாயகத்தை பாதுகாக்கின்றன. இந்திய நிறுவனங்கள் இன்று எத்தியோப்பியாவில் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளர்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. 140 கோடி இந்திய மக்களின் சார்பாக, நட்பு மற்றும் சகோதரத்துவத்தின் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். எத்தியோப்பியாவின் உயரிய விருதை பெற்றதில் நான் பெருமை அடைந்தேன்.

பணிவுடன்…!

இந்திய மக்களின் சார்பாக இந்த விருதை கூப்பிய கரங்களுடனும், பணிவுடனும் ஏற்றுக்கொள்கிறேன். இந்தியாவிற்கு, எத்தியோப்பியாவிற்கு இடையே வலுவான உறவுகள் உள்ளது. இந்த மாபெரும் கட்டடத்தில் உங்கள் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இங்கே மக்களின் விருப்பம் அரசின் விருப்பமாக மாறுகிறது. அரசின் விருப்பம் மக்களின் விருப்பத்துடன் இணக்கமாக இருக்கும் போது, திட்டங்களின் பலன் எளிதில் சென்று அடைகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

raja
டிச 17, 2025 17:34

எப்படி பாட்டிலுக்கு பத்து ருவா அதிகம் வாங்கி லட்சம் கோடி களில் கொள்ளை அடிப்பது, எப்படி சொல்லாமல் கொள்ளாமல் மின் கட்டணத்தை உயர்த்தி கொள்ளை அடிப்பது காய்கறியில் இருந்து கட்டிட பொருள்கள் வரை விலை வாசியை ஏற்றி கொள்ளை அடிப்பது பொங்கல் தொகுப்பில் இருந்து அனைத்து இலவசங்களில் எப்படி கொள்ளை அடிப்பது வேலை வாய்ப்பில் லட்சம் கோடிகளில் எப்படி கொள்ளை அடிப்பது, கனிம வளங்களை எப்படி கொள்ளை அடிப்பது, வந்த ஐந்து வருடத்தில் தமிழன் தலையில் ஆறு லச்சம் கோடி கடனை சுமத்தியது, எப்படியெல்லாம் மக்களை கொலுசு, ஹாட் பாக்ஸ், பட்டியில் அடைத்து இலவச பிரியாணி ஓய் குவார்ட்டர், இன்ப சுற்றுலா அழைத்து சென்று ஏமாற்றி ஓட்டை பெறுவது, ஆசையை தூண்டி ஏமாற்றுவது என்பதில் வேண்டுமானால் நமது விடியா மாடல் அரசு முன்னோடியாக இருக்கலாம்...


RAMESH KUMAR R V
டிச 17, 2025 16:58

வாழும் தெய்வம் எங்கள் மோடிஜி


அசோகன்
டிச 17, 2025 14:33

மோடிஜி ஒரு கடவுள் அவதாரம்.......இவர் காலத்தில் வாழும் புண்ணியதை எனக்கு கடவுள் கொடுத்துள்ளார்......


Kesavan Subramanian
டிச 17, 2025 15:04

correct


Ahamed
டிச 17, 2025 14:04

2026ரில் ஓரே அடி எல்லாம் கிளோஸ்... பிஜேபி மட்டும் பாஸ்...


R. SAKTHIVEL
டிச 17, 2025 13:59

மிகவும் அருமையான பேச்சு.


Marai Nayagan
டிச 17, 2025 13:19

அருமையான....உணர்வு பூரவ பேச்சு. சிறிய நாடுகளையும் மதித்து ஆணவம் இல்லமால் பேசுவதும் தனி தன்னை தான். சனாதன தரம வளர்ப்பு அவ்வாறு...ஜெய் ஹிந்த்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை